
டிக்கெட் விலை
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் 27 ஆம் தேதி முதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்ஜெட் டிக்கெட் விலையாக 1500 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலையாக 3000 ரூபாய் ஆகும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் வெறும் நான்கு பார்வையாளர்கள் மாடத்திற்கு மட்டும்தான் டிக்கெட் புக்கிங் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மற்ற டிக்கெட்?
இதனால் மற்ற டிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கப்படுமா இல்லை ஸ்பான்சர் போன்றவற்றிற்கு சென்று விடுமா என்ற கலக்கம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வரும் மூன்றாம் தேதி லக்னோ சென்னை அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27ஆம் தேதி கவுண்டரில் மட்டும் 1500 ரூபாய் டிக்கெட் விற்கப்படும். இதே போன்று 3000 ரூபாய் கான டிக்கெட் ஆன்லைனில் மட்டும் விற்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்
2000 மற்றும் 2500 ரூபாய் காண டிக்கெட் ஆன்லைன் மற்றும் கவுண்டர் என இரண்டிலுமே விற்கப்படுகிறது. மேலும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் தவிர கேமரா,லேப்டாப், பவர் பேங்க் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களும் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஹெல்மெட், லேப்டாப் ,பேக் குடை மற்றும் எந்த ஒரு பையும் மைதானத்திற்குள் கொண்டு வர செல்ல முடியாது.

வாகன பார்க்கிங்
டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கேட் எண் விவரத்தில் மட்டுமே ரசிகர்கள் உள்ளே வர முடியும். கவுண்டர் மற்றும் ஆன்லைனில் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டும் தான் விற்கப்படும். கார் பார்க்கிங்க்கு கலைவாணர் அரங்கம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் சென்னை பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருப்பதாகவும் எனினும் ரசிகர்கள் பொது போக்குவரத்தில் வந்து செல்வதே சிறந்தது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொருட்களுக்கு தடை
எம்ஏ சிதம்பரம் மைதானம் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் யாரும் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று புகையிலை ,பீடி ,குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச குடிநீர் வசதி மைதானத்தில் அனைத்து இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி மைதானத்தில் ஐ மாடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீருக்கு ஏற்பாடு
போட்டிக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்றும் மைதானத்தை விட்டு ஒரு முறை வெளியேறினால் மீண்டும் உள்ளே வர அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மைதானத்தில் உணவு மற்றும் வெளியே இருந்து கூல்ட்ரிங்ஸ் பொருட்கள் ஏதும் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளை மைதானத்திற்குள் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications