Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎலில் தோனி தான் மாஸ்.. சச்சினுக்கு கூட இப்படி நடக்கல.. கண் இமைக்கும் நேரத்தில் 60 ஆயிரம் போச்சு

அகமதாபாத் : ஐபிஎல் தொடர் முன் எப்போதும் இல்லாத வகையில் பிளாக்பஸ்டர் ஆக அமையும் என கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

பழைய அட்டவணை மாதிரி சொந்த மண்ணில் ஏழு ஆட்டங்களும் வெளிநகரங்களில் 7 ஆட்டங்களும் என 14 போட்டிகளில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகள் விளையாடுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனைகள் ஒவ்வொரு மைதானங்களிலும் தொடங்கிவிட்டது.

பெங்களூரில் ஏற்கனவே ஆர்சிபி விளையாடும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை கவுண்டர் மற்றும் ஆன்லைனில் தொடங்கிவிட்டது. இதேபோன்று மும்பையிலும் டிக்கெட் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

சென்னையில் தொடங்கவில்லை

சென்னையில் தொடங்கவில்லை

இன்னும் சென்னையில் மட்டும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கப்படவில்லை. அதற்கு காரணம் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இன்னும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கப்படவில்லை.

60 ஆயிரம் டிக்கெட்

60 ஆயிரம் டிக்கெட்

இந்த நிலையில் அகமதாபாத்தில் வரும் 31ஆம் தேதி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இதற்காக முதல் கட்டமாக 70 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் சில மணித்துளிகளில் ரசிகர்கள் ஆன்லைன் மூலம் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி விட்டார்கள்.

சிஎஸ்கே போட்டிகள்

சிஎஸ்கே போட்டிகள்

இதேபோன்று பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி மற்றும் சென்னை அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் அனைத்தும் வீற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மும்பையில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. கொல்கத்தாவிலும் கே கே ஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் காலி ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தோனியின் மாஸ்

தோனியின் மாஸ்

இதன் மூலம் சென்னை அணி விளையாடும் அனைத்து மைதானங்களிலும் டிக்கெட்டுகள் மற்ற போட்டிகளை விட படுஜோராக நடைபெறுகிறது. தோனியின் பிரபலத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற போட்டிகளுக்கும் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றாலும் சென்னை டிக்கெட் மட்டும் நமது ஊர் கடையில் சூடான சமோசா விற்று தீர்வது போல் உடனே ஹவுஸ் புல் ஆகி விடுகிறது.

காரணம்

காரணம்

இதற்கு காரணம் தோனிக்கு தற்போது 41 வயதாகிவிட்டது. இது அவருக்கு கடைசி ஐபிஎல் சீசன் ஆக இருக்கலாம் என கருதப்படுவதால் ரசிகர்கள் அனைவரும் தோனியை கடைசி ஒரு முறை மைதானத்தில் பார்த்து விட வேண்டும் என்ற வெறியில் டிக்கெட்டுகளை குறிவைத்து வாங்குகிறார்கள். மற்ற மைதானங்களில் இந்த நிலைமை என்றால் சென்னையில் நான்காண்டுகளுக்கு பிறகு தோனி திரும்ப உள்ளார். இதனால் டிக்கெட்டு வாங்க சேப்பாக்கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனால் கூட்டம் சேராமல் இருப்பதற்காக ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று விட வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, March 21, 2023, 22:42 [IST]
Other articles published on Mar 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+