Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானேவை வீழ்த்திய ஹசரங்கா.. விண்ணை தொட்ட ஆர்சிபி ரசிகர்கள் கரகோஷம்.. அரைசதத்தால் அடக்கிய கான்வே!

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தொடக்க வீரர் டெவோன் கான்வே 32 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது. சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே தொடக்கம் கொடுத்தனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹானே - கான்வே இணை முதல் சில ஓவர்கள் நிதானம் காட்டியது.

IPL 2023: CSK opener Devon Conway scored a 32 balls half century against RCB in Chinnaswam,y Stadium

பின்னர் 4வது ஓவர் முதல் அதிரடியை தொடங்கிய நிலையில், இளம் வீரர் விஜய்குமார் பந்துவீச்சில் ரஹானே ஒரு இமாலய சிக்சரை விளாசினார். தொடர்ந்து பார்னல் வீசிய 6வது ஓவரில் ரஹானே அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 53 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து சுழல் பந்துவீச்சாளர்களை ஆர்சிபி அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. மேக்ஸ்வெல் பந்தில் கான்வே சிக்சர் அடித்து வரவேற்க, இன்னொரு முக்கிய பந்துவீச்சாளரான ஹசரங்காவுக்கும் அதேபோன்ற வரவேற்பு கொடுக்கப்பட்டது.

IPL 2023: CSK opener Devon Conway scored a 32 balls half century against RCB in Chinnaswam,y Stadium

இதனைத் தொடர்ந்து ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதேபோல் ஓவரில் கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் மீண்டும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொடக்கம் முதலே கான்வே அதிரடியாக ஆடினார். ரஹானே ஆட்டமிழந்த போது ஆர்சிபி ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்ட நிலையில், அந்த சத்தத்தை கான்வே அரைசதம் மூலம் அடக்கினார்.

Story first published: Monday, April 17, 2023, 20:40 [IST]
Other articles published on Apr 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+