மும்பை : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் சொந்த மண்ணில் லக்னோ அணியை சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து சிஎஸ் கே வீழ்த்தியது. இதே போன்று மும்பையிலும் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணியில் ஏற்கனவே மோயின் அலி, ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் ஆகிய மூன்று சுழற்பந்துச்சாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மகிஷ் தீக்சணா சென்னை திரும்புகிறார்.இதன் மூலம் சிஎஸ்கே அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 12ஆம் தேதி ராஜஸ்தானில் எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் தீக்சனா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தீக்சணா தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் கூட தீக்சனா பந்துவீச்சை அடிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறி இருக்கிறார்கள்.
கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டி20யில் கூட நியூசிலாந்து அணி 183 ரன்கள் அடித்த நிலையில் தீக்சனா ஓவரில் மட்டும் வெறும் 22 ரன்கள் மட்டுமே ஆடி இருக்கிறது. இதேபோன்று முதல் டி20 ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கூட தீக்சணா சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணிக்கு வெற்றி தேடி கொடுத்து இருக்கிறார்.

தீக்சனா ரன்களை கட்டுப்படுத்தி நெருக்கடி ஏற்படுத்துவதில் வல்லவர். மேலும் பவர் பிளேவில் கூட தீக்சனாவால் பந்து வீச முடியும். இதனால் பிளேயிங் லெவனின் இலங்கை வீரர் தீக்சனா இடம்பெற்றால் சிஎஸ்கே அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். இதேபோன்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரத்னாவும் அடுத்த போட்டியில் விளையாட சென்னை வந்து விடுவார்.
இதனால் சிஎஸ்கே தங்களுடைய முழு பலத்தை எட்டி இருக்கிறது. தீக்சனா வந்தால் யாரை அணியை விட்டு வெளியே உட்கார வைப்பது என்ற குழப்பம் தோனிக்கு ஏற்படும். ஏனென்றால் தற்போது மிட்செல் சான்ட்னரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதனால் யாரை விடுவது, யாரை சேர்ப்பது என்ற பெரும் குழப்பம் ஏற்படலாம்.