நீ எப்போதும் எங்க மனசுல இருக்க.. ரிஷப் பண்ட்க்காக டெல்லி செய்த காரியம்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
லக்னோ : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசன் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், லக்னோ அணிகளும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசி வருகிறது. டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார்.
இதில் ரிஷப் பண்ட் பிழைத்ததே புதிய உசுரு என்ற அளவுக்கு இருந்தது. ரிஷப் பண்ட் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பவே ஒரு ஆண்டு ஆகும் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து ரிஷப் பண்ட்க்கு பதிலாக கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டார்.

ரிஷப் பண்ட்க்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளார். அதன் படி வீரர்கள் அமர்ந்து இருக்கும் இடம்ன DUG OUT இல் ரிஷப் பண்ட் ஜெர்சிய மேலே தொங்கவிட்டு, நீ எப்போது எங்கள் மனதில் இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வகையில் செய்து இருக்கிறார்.
மேலும் டெல்லியில் போட்டி நடைபெறும் போது ரிஷப் பண்டை அழைத்து போட்டியை நேரில் காண வைக்கவும் ஏற்பாட செய்யப்பட்டுள்ளதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். கால்பந்து போட்டியில் ஏதேனும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இப்படி தான் சம்பந்தபட்டவரின் வீரரின் ஜெர்சியை மற்ற வீரர்கள் போட்டியில் வைத்திருப்பார்கள். தற்போது அதனையே டெல்லி அணி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications