அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 2வது நாளாக Low score த்ரில்லர் ஆட்டம் நடைபெற்றது. நேற்று 127 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் பெங்களூருவிடம் லக்னோ அணி தோலவியை தழுவியது. இந்த நிலையில், அகமதாபாபாத்தில் முதலிடத்தில் உள்ள டெல்லியும், கடைசி இடத்தில் உள்ள டெல்லியும் மோதியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய பில் சால்ட் டக் அவுட்டாக, டெல்லிக்கு தொடக்கமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.கேப்டன் வார்னர் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் 8 ரன்களில் வெளியேற, மணிஷ் பாண்டே 1 ரன்னில் வெளியேறினார். பிரியாம் கார்க் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் டெல்லி அணி 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் 27 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய அமன் கான் 44 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதனால் டெல்லி அணி 130 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை தொட்டது. முகமது ஷமி 4 ஓவர் வீசி 11 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, பர்பிள் தொப்பியை வென்றார்.
இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் விரித்திமான் சாஹா டக் அவுட்டாக, இம்பேக்ட் வீரராக விளையாடிய சுப்மன் கில் 6 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஸ்டாராக விளங்கிய விஜய் சங்கரை 6 ரன்களில் இஷாந்த் சர்மா பெவிலியனுக்கு வழி அனுப்பி வைத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் டக் அவுட்டாக குஜராத் அணியும் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த அபினவ் மனோகர், மெதுவாக விளையாடி, விக்கெட்டுகள் விழாமல் விளையாடினார்.
ஹ்ர்திக் பாண்டியா 44 பந்தில் அரைசதம் கடக்க, அபினவ் மனோகர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் வெற்றிக்கு 17 பந்தில் 37 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 18வது ஓவரில் கலீல் அகமது 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். கடைசி 2 ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்ட போது, ஆண்ரிச் நோக்கியா பீந்துவீச்சில் ரிகுல் திவாட்டியா தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

இதனால் ஆட்டமே தலைக்கீழ் மாறியது. குஜராத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இதனை அனுபவ வீரர் இஷாந்த் சர்மா வீசினார். முதல் 3 பந்தில் இஷாந்த் சர்மா 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுக்க, 4வது பந்தில் ராகுல் திவாட்டியா ஆட்டமிழக்க, கடைசி 2 பந்தல் குஜராத் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசி, டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் குஜராத் அடைந்த 2வது தோல்வியாகும். நடப்பு சீசனில் டெல்லி 3வது வெற்றியை பதிவு செய்தது