“அவரின் மறுபக்கம் யாருக்கும் தெரியாது” விராட் கோலியை கையாள்வது எப்படி?.. டூப்ளசிஸ் வெளிப்படை பேச்சு
பெங்களூரு: ஆர்சிபி அணியில் விராட் கோலி போன்ற ஒரு வீரரை எப்படி கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு கேப்டன் டூப்ளசிஸ் பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் இருக்கும் ஆர்சிபி அணி, கடந்தாண்டு புதிய கேப்டனை பெற்றது. விராட் கோலி தாமாக முன்வந்து கேப்டன்சியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் டூப்ளசிஸ் நியமிக்கப்பட்டார். அவரின் கேப்டன்சியிலும் அந்த அணி அரையிறுதி வரை சென்று வெளியேறியது.

டூப்ளசிஸ் கேப்டன்சி
ஆர்சிபி அணிக்காக நீண்ட வருடங்களாக கேப்டன்சி செய்த விராட் கோலி போன்ற ஒரு வீரரை எப்படி டூப்ளசிஸ் கையாள போகிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே இருந்துக்கொண்டே இருந்தது. ஆனால் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு ஆர்சிபிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து அனைத்து குழப்பங்களுக்கும் பதிலடி கொடுத்தனர்.

டூப்ளசிஸ் பேச்சு
இந்நிலையில் கோலியை கையாள்வது குறித்து டூப்ளசிஸ் மனம் திறந்துள்ளார். அதில், என்னை விட மிகச்சிறந்தவர் விராட் கோலி. அவருடன் போட்டி போட நினைக்கவே கூடாது. மயில்கள் ஈகோவினால் சண்டையிட்டுக்கொள்ளும். ஆனால் இறுதியில் கிடைக்கும் இறகுகள் எவ்வளவு மென்மையானவை என்பதே முக்கியம். அந்தவகையில் அதிர்ஷ்டசமாக கோலி போன்ற மென்மையானவர்கள் ஆர்சிபியில் கிடைத்துள்ளனர்.

கோலியுடனான உறவு
கோலிக்கு எதிராக பல ஆண்டுகளாக விளையாடியுள்ளேன். உலகிலேயே அவரை எதிர்கொள்வது தான் மிக கடினம். எப்படி அவரிடம் இவ்வளவு ஆற்றல் உள்ளது என ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு முறை விக்கெட் விழும்போதும், அது முதல் விக்கெட்டாக இருந்தாலும் சரி, கடைசி விக்கெட்டாக இருந்தாலும் சரி, கோலியின் உற்சாகத்திற்கு குறைவே இருக்காது. அவர் அதில் சூப்பர் மனிதர்.

மறுபக்கம்
விராட் கோலியுடன் விளையாடும் போதுதான் அவரின் மறுபக்கம் என்பது தெரியவரும். அவர் மிகவும் அக்கறையுடன் பாசம் காட்டக்கூடிய வீரர். குறிப்பாக குடும்பத்தை பற்றி நினைத்துக்கொண்டே இருக்கக்கூடிய நபர். அவர் மிகவும் சிறந்த நபர் என டூப்ளசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications