Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனை.. 2008ல் சிஎஸ்கே வீரர் அடித்த இமாலய சிக்சர்.. முழு விவரம்!

சென்னை: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ஆல்பி மார்கல் 124 தூரம் அடித்த சிக்சர் சாதனை, 16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தப் போட்டிக்கு சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டம் இதுநாள் வரை தொடர்ந்து வருகிறது. ஏராளமான ரசிகர்கள் சென்னை அணி வெற்றிபெற்ற தருணத்தை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

IPL 2023: Even after 16 Years, Albie Morkel longest six record is remain unbroken in the IPL History

இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் மொத்தமாக 1,124 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் 36 சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார். அதேபோல் அதிக தூரம் சென்று விழுந்த சிக்சர் பட்டியலில் டூ பிளஸிஸ் முதலிடம் பிடித்து விளாசியுள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் 115 மீட்டர் தூரம் சிக்சர் விளாசி மிரட்டியுள்ளார்.

இந்த பட்டியலில் 114 மீட்டர் தூரம் விளாசி மும்பை அணியின் டிம் டேவிட்டும், 112 மீட்டர் தூரம் விளாசி பட்லர் 3வது இடத்திலும், 111 மீட்டர் தூரம் விளாசி சிவம் துபே 4வது இடத்திலும், 110 மீட்டர் தூரம் சிக்சர் விளாசி ரிங்கு சிங் 5வது இடத்திலும் உள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தூரம் சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் சென்னை அணியின் முன்னாள் வீரர் ஆல்பி மார்கல் 124 மீட்டர் தூரம் விளாசி முதலிடத்தில் நீடிக்கிறார்.

2008ஆம் ஆண்டு மார்கல் படைத்த சாதனை 16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து 2011ஆம் ஆண்டு பிரவீன் குமாரும் 124 மீட்டர் தூரம் சிக்சர் அடித்த் மார்கல் சாதனையை சமன் செய்தார். இதையடுத்து கில்கிறிஸ்ட் 122 மீட்டர் தூரமும், உத்தப்பா 120 மீ தூரமும் சிக்சர் விளாசி அசத்தியுள்ளனர்.

Story first published: Wednesday, May 31, 2023, 22:13 [IST]
Other articles published on May 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+