Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல டக்கரு டோய்.. தோனியின் பயிற்சி இனி நேரலையிலா??.. சிஎஸ்கே கொடுத்த அப்டேட்.. ஒன்றிணைந்த ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் ஒன்றிணைந்து புதிய கோரிக்கை ஒன்றை வைத்து வருகின்றனர்.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் முதல் போட்டி நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

 ஸ்பெஷல் வருடம்

ஸ்பெஷல் வருடம்

இந்த வருடம் சென்னை அணிக்கு மிகவும் ஸ்பெஷலான சீசன் ஆகும். ஏனென்றால் கடந்த சில வருடங்களுக்கு பின்னர் ஹோம் கிரவுண்டில் அந்த அணி விளையாடவுள்ளது. இதே போல எம்.எஸ்.தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் எப்படியாவது கோப்பையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

இதற்காக இம்மாத தொடக்கத்திலேயே பயிற்சியை தொடங்கிவிட்டது சிஎஸ்கே. முன்கூட்டியே சென்னைக்கு வந்து சேர்ந்த கேப்டன் எம்.எஸ்.தோனி அங்கு இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவருடன் தீபக் சஹாரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

சிஎஸ்கேவின் வீடியோ

சிஎஸ்கேவின் வீடியோ

இந்நிலையில் தோனி காட்டுத்தனமாக பேட்டிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு சிஎஸ்கே ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. கடைசி சீசன் என்பதால் தனது விண்டேஜ் ஆட்டத்தை ரசிகர்களுக்கு காட்ட தோனி ஆர்வத்துடன் உள்ளார். அதற்காக பெரும்பாலும் சிக்ஸர்களை அடிப்பதற்கு தான் பயிற்சி பெற்று வருகிறார். எப்படி போட்டாலும் அடிப்பேன் என்பது போல அந்த வீடியோவில் செயல்பட்டிருக்கிறார்.

ரசிகர்களின் கோரிக்கை

ரசிகர்களின் கோரிக்கை

இதனை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள், தோனி பயிற்சி செய்வதை நேரலையாக யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்ப வேண்டும் எனக்கோரி வருகின்றனர். தோனியின் சிக்ஸர்களை பார்த்துக்கொண்டே இருப்பதற்காக நேரலை கேட்டு வருகின்றனர். எனினும் சிஎஸ்கே இதற்கு சம்மதிக்காது. ஏனென்றால் தோனியின் பலவீனங்கள் வெளியாகிவிடலாம்.

Story first published: Friday, March 10, 2023, 17:14 [IST]
Other articles published on Mar 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+