Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல டக்கரு டோய்.. சிஎஸ்கே வெற்றிக்கான முதற்படி.. கேப்டன் தோனி எடுத்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எடுத்துள்ள முடிவால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த முறை கோப்பை கன்ஃபார்ம் என இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் மார்ச் 31ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி, இறுதிப்போட்டி வரும் மே 28ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு பிறகு அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி என்றாலும், சென்னை அணி ரசிகர்கள் கூடுதல் உற்சாகமாகும்.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி இந்தாண்டுடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுவும் அவர் கூறியதை போலவே சென்னையில் தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டு விடைபெறவுள்ளார். எனவே இந்த முறை கோப்பையுடன் தோனி ஓய்வு பெற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கான முதற்கட்ட பணிகளை தோனி தொடங்கிவிட்டார்.

முதற்கட்ட பணிகள்

முதற்கட்ட பணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்கள் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே தொடங்கவுள்ளது. மற்ற சில அணிகளும் மார்ச் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் பயிற்சிகளை தொடங்க ஏற்பாடு செய்துள்ளன. சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் மற்றும் பெங்களூரு என்.சி.ஏவில் உள்ள வீரர்களை தவிர மற்ற அனைத்து உள்நாட்டு வீரர்கள் மட்டும் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். ஆனால் சிஎஸ்கேவில் மட்டும் தோனியும், தீபக் சஹாரும் நேரடியாக களத்தில் குதிக்கின்றனர்.

கூடுதல் பலம்

கூடுதல் பலம்

பயிற்சி முகாமின் முதல் நாளில் இருந்தே கேப்டன் எம்.எஸ்.தோனி, இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவுள்ளார். கடந்தாண்டு சரியான ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த தீபக் சஹார் இந்தாண்டு முழு பலத்துடன் களமிறங்க முன்கூட்டியே சேப்பாக்கம் செல்கிறார். இதனால் பவுலிங் துறையில் சிஎஸ்கே கூடுதல் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அணி ஏற்பாடு

குஜராத் அணி ஏற்பாடு

இது ஒருபுறம் இருக்க ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே பயிற்சிகளை தொடங்கிவிட்டது. உள்நாட்டு வீரர்கள் அனைவரும் பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். இந்தாண்டு நடைபெறும் முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் தான் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

Story first published: Tuesday, February 21, 2023, 17:52 [IST]
Other articles published on Feb 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+