ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று வாழ்வா சாவா ஆட்டத்தில் கொல்கத்தா அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. 9 போட்டியில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடனும், ஐதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் உள்ளது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை, எஞ்சிய அனைத்து போட்டிகளையும் வென்றால் மட்டுமே 16 புள்ளிகளை பெற முடியம். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, ரன் குவிப்பில் ஈடுபட்டு, அதிக ரன்களை சேர்த்து நெருக்கடி தர நிதிஷ் ரானா முடிவு எடுத்துள்ளார்.

இதே போன்று இன்று கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துள்ளோம். இதன் மூலம் கூடுதலாக ஒரு 10, 15 ரன்களை அடிக்க முடியும். பந்துவீசும் போது இம்பேக்ட் வீரரை அணிக்குள் கொண்டு வரலாம் என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஐதராபாத் அணி கேப்டன் ஏய்டன் மார்க்கரம், எங்கள் அணி பவுலர்கள், சிறப்பாக பந்துவீசினர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் சொதப்பி வருகிறார்கள்.

இன்றைய ஆட்டத்தில், அவர்கள் அணிக்காக நின்று தங்களுடைய பங்களிப்பை தர வேண்டும் என்று கூறினார். ஐதராபாத் அணியில் இன்றைய ஆட்டத்தில் கார்த்திக் தியாகி அணிக்குள் திரும்பி இருக்கிறார். பல மாதமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருக்கிறார்