For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - கெட்டதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கு.. கேகே ஆரை காப்பாற்ற வரும் அதிரடி வீரர்.. விவரம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நடப்பு சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு பதில் மாற்று வீரராக ஜேசன் ராயை கொல்கத்தா அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஜேசன் ராய் தன்னுடைய அடிப்படை விலையாக ஒன்றரை கோடி ரூபாயை நிர்ணயித்தார்.

தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஹிபுல் ஹசன் ஆகியோர் நடப்பு தொடரில் கே கே ஆர் அணிக்காக விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய்க்கு இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

IPL 2023- KKR signed English star batsman jason roy as replacement for shreyas

ஜேசன் ராய் தற்போது செம பார்மில் இருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கூட அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தற்போது அவர் நல்ல பார்மில் இருப்பதால் கே கே ஆர் அணியின் தொடக்க பிரச்சனை முற்றிலும் தீர்ந்துவிடும். கே கே ஆர் அணிக்காக அவர் நல்ல தொடக்கத்தை அளிப்பார் என்பதால் இது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது.

இதுவரை ஜேசன் ராய் 64 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1522 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137 ஆகும். ஜேசன் ராய்க்கு விக்கெட் கீப்பிங் செய்ய தெரியும் என்பது கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் குர்பாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக கே கே ஆர் அணிக்காக களம் இறங்க கூடும்.

IPL 2023- KKR signed English star batsman jason roy as replacement for shreyas

ஜேசன் ராய் ஏற்கனவே கே கே ஆர், குஜராத், டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உடையவர். எனினும் கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது பங்கேற்று பின் தொடர் தொடங்குவதற்கு முன்பு கடைசி நேரத்தில் ஜேசன் ராய் விலகியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அவரை எந்த அணியும் மினி ஏலத்தில் எடுக்காமல் இருந்தார்கள்.நடப்பு சீசனில் கே கே ஆர் அணி முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது வரும் ஆறாம் தேதி பெங்களூர் அணியுடன் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கே கே ஆர் விளையாட இருக்கிறது.

Story first published: Wednesday, April 5, 2023, 17:49 [IST]
Other articles published on Apr 5, 2023
English summary
IPL 2023 - KKR signed English star batsman jason roy as replacement for shreyas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+