IPL - ஒரு கேட்ச் மிஸ்சால் தலைக்கீழ் மாறிய ஆட்டம்.. டெல்லியை நசுக்கிய லக்னோ.. கடைசி பந்தில் டிவிஸ்ட்
லக்னோ : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் லக்னோ 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மெயர்ஸ் 14 ரனகள் எடுத்திருந்த போது டெல்லி அணி வீரர் கலீல் அகமது சுலபமான கேட்ச் ஒன்றை தவறவிட்டார். இதனையடுத்து தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மெயர்ஸ், டெல்லி பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

தீபக் ஹூடா 18 பந்தில் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், குர்னல் பாண்டியா 15 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, மெயர்ஸ் அபாரமாக விளையாடி 28 பந்தில் அரசதம் கடந்தார். தொடர்ந்த அதிரடி காட்டிய அவர் 38 பந்துகளில் 73 ரன்களை விளாசினார்.
இதில் 7 இமாலய சிக்சர்கள், 2 பவுண்டரிகளும் அடங்கும். நிக்கோல பூரானும் தன் பங்கிற்கு 3 சிக்சர்கள் விளாச 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியில் ஆயுஷ் பதோனி 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். அவர் ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஒரு பந்துக்காக உள்ளே இம்பாக்ட் வீரராக வந்த கிருஷ்ணப்பா கௌதம் சிக்சர் அடித்தார். இதனால் 20 ஓவர் டிவில் லக்னோ 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.


Click it and Unblock the Notifications