Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருயா அது இன்னொரு மலிங்கா.. பதிரானாவை சமாளிக்க ராஜஸ்தானின் புதிய யுக்தி.. ரசிகர்கள் ஆச்சரியம்!

ஜெய்ப்பூர்: ஜூனியர் மலிங்கா என்ற அழைக்கப்படும் பதிரானாவை எதிர்கொள்ள, மலிங்காவை போலவே பந்துவீசும் ரவீந்திர கிச்சட் என்ற இளம் வீரரின் பந்துவீச்சில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயிற்சி பெறும் வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், "இலங்கை ரசிகர்களே.. பதிரானா என்னும் வைரத்தை உங்களுக்காக தோனி பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார். ஹர்ஷா போக்ளேவின் பதிவை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தனர்.

IPL 2023: Malinga 2.0 Ravindra Khichad was called up by Rajasthan Royals to practise playing against CSK Pathirana bowling

ஏனென்றால் ஒவ்வொரு முறை பதிரானா விக்கெட் வீழ்த்தும் போதும் தோனி முகத்தில் வரும் மகிழ்ச்சி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. டெத் ஓவர்களில் 20 வயதாகும் பதிரானாவின் தோள்கள் மீது 41 வயதாகும் தோனி கைகள் போட்டு தனது ஆலோசனைகளையும் அனுபவத்தையும் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரும் மலிங்கா போல் மாபெரும் ஜாம்பவான் வீரராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு மலிங்கா மூலமாகவே பேட்ஸ்மேன்கள் அதிகமாக திணறி போயினர். தற்போது அவரது இடத்திற்கு இன்னொரு இளம் வீரர் தயாராகி வருவது பேட்ஸ்மேன்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். பதிரானாவின் பந்தை எதிர்கொள்ள ஐபிஎல் அணிகள் பிரத்யேகமாக திட்டமிட தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தோனி கைநீட்டும் இடங்களில் எல்லாம், பதிரானா பாய்ந்து வருகிறார். தோனியின் அனுபவமும், பதிரானா தைரியமும் சென்னை அணிக்கு ஒரு கூடுதல் ஆயுதத்தை கொடுத்துள்ளது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இன்று இரவில் விளையாடுகிறது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி களமிறங்குவதால், அடுத்தடுத்து அடைந்த இரு தோல்விகளில் இருந்து வெளியேறி வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். இந்த நிலையில் சென்னை அணியின் இளம் வீரரான பதிரானாவை எதிர்கொள்ள ராஜஸ்தான் அணி பிரத்யேக பயிற்சியை எடுத்து வருகிறது.

IPL 2023: Malinga 2.0 Ravindra Khichad was called up by Rajasthan Royals to practise playing against CSK Pathirana bowling

ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா இருந்து வரும் சூழலில், மலிங்காவை போலவே பந்துவீசும் இந்திய இளம் வீரரான ரவீந்திர கிச்சட் என்பவரை பந்துவீச வைத்து ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மலிங்கா கண்முன்பாகவே மலிங்கா போல் பந்துவீசும் ஒருவரை வைத்து ராஜஸ்தான் வீரர்கள் பயிற்சி பெறும் வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி அஸ்வினை போலவே பந்துவீசும் ஒருவரை வைத்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 27, 2023, 8:42 [IST]
Other articles published on Apr 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+