Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL CSK vs MI Head to Head record - இம்முறையாவது வெற்றி பெறுமா சிஎஸ்கே.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மும்பை : ஐபிஎல் தொடரில் 2 பலமான, வெற்றிக்கரமான அணி என்றால், அது மும்பையும், சென்னையும் தான். இதுவரை 15 முறை நடைபெற்ற தொடரில், மும்பை 5 முறை, சிஎஸ்கே 4 முறை என இரு அணிகளும் இணைந்து 9 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறாகள். ஆனால் கடைசி சீசனில் இரண்டு அணிகளும் சரி அடி வாங்கியது.

விளையாடிய 14 போட்டிகளில் இரு அணிகளும் தலா 10 போட்டியில் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 9வது இடத்திலும், மும்பை அணி 10வது இடத்திலும் இருந்தது. இதனால் இரு அணிகளும் இழந்த பெருமையை மீட்க போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

IPL 2023 - MI vs CSK Head to head record -will Dhoni rectify it

டாப் 2 அணிகளாக மும்பையும், சிஎஸ்கே வும் மோதும் போது, இதன் டிஆர்பி பறக்கும். அதிக மக்கள் இந்தப் போட்டியை பார்ப்பார்கள். இந்த நிலையில், இரு அணியிலும் யார் கெத்து என்று பார்த்தால் மும்பை அணியின் கையே ஓங்கி இருக்கிறது. மும்பை, சிஎஸ்கே அணிகள் இதுவரை 34 முறை ஐபிஎல் தொடரில் மோதியுள்ளன.

இதில் சிஎஸ்கே 14 முறையும், மும்பை அணி 20 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் கடைசி 10 ஆண்டுகளில் மும்பை அணியில் செயல்பாடு வேற லெவலில் உயர்ந்துள்ளது. தோனிக்கு ஒர ரெக்கார்ட் குறையாக இருக்கிறது. என்றால் அது இது தான். ஐபிஎல் தொடரில் மும்பை அணியிடம் மட்டும் தான் சிஎஸ்கே அதிக முறை தோல்வியை தழுவி இருக்கிறது.

IPL 2023 - MI vs CSK Head to head record -will Dhoni rectify it

இதில் 2019ஆம் ஆண்டில் மும்பை அணி சிஎஸ்கேவை எதிர்கொண்ட 4 போட்டியிலும் வென்று இருக்கிறது. ஆனால் அதன் பிறகு ஒவ்எவாரு சீசனிலும் இரு அணிகளும் தலா இரண்டு முறை மோதியுள்ளன. அதில் சிஎஸ்கே ஒரு முறையும்,மும்பை அணி ஒரு முறையும் வென்று இருக்கிறது. இதனால் தோனி இம்முறை மும்பையை 2 முறையும் சந்திக்கும் போது வீழ்த்த வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Story first published: Friday, April 7, 2023, 14:07 [IST]
Other articles published on Apr 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+