Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலை கொடுத்து ஏமாந்த அணி.. இவருக்கு எல்லாம் இவ்வளவு தேவையா?

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தமாக 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் 29 வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் போட்டி போட்டு எடுத்தனர். மொத்தமாக 167 கோடி ரூபாய் ஏலத்தில் செலவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் சில அணி வீரர்களுக்கு திறமைக்கு ஏற்ப அதிக விலை கொடுத்து எடுத்தது. ஆனால் பல அணிகள் வீரர்களுக்கு மிகவும் அதிக விலை கொடுத்து ஏமாந்து இருக்கிறது.
இப்படி எந்த அணி எவ்வளவு ஏமாந்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

நிக்கோலஸ் பூரான்

நிக்கோலஸ் பூரான்

லக்னோ அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை 16 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் பூரான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த முறையே அதிக விலைக்கு ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்ட பூரான் 14 போட்டியில் விளையாடி வெறும் 306 ரன்களை மட்டும் தான் அடித்து இருந்தார். இதில் இரண்டு சதம் அடங்கும்.

அதிக தொகை

அதிக தொகை

அதாவது பரவாயில்லை அதற்கு முந்தைய சீசனில் 12 போட்டியில் விளையாடி 85 ரன் மட்டுமே நிக்கோலஸ் பூரான் சேர்த்தார். அதிகபட்சமாக ஆறு கோடி ,ஏழு கோடி வரை கொடுத்திருக்கலாம். ஆனால் 16 கோடி என்பது அவருக்கு அளித்த தொகை அதிகமாகவே பார்க்கப்படுகிறது.இதைப் போன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை ராஜஸ்தான் அணி 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

ஹோல்டர்

ஹோல்டர்

அவரை ஆரம்ப விலைக்கு எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஓரளவுக்கும், பேட்டிங்கில் ஓரளவுக்கு செயல்படுவார். டி20 கிரிக்கெட்டில் அவர் பெரிய தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தியது இல்லை.மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை காட்டிலும் அவர் அதிரடி ஆல்ரவுண்டர் கிடையாது. இதனால் போல்டருக்கு அதிக பணம் கொடுத்து ராஜஸ்தான் ஏமாந்திருக்கிறது.

சிவம் மவி

சிவம் மவி

இதேபோன்று நடப்பு சாம்பியன் ஆன குஜராத் வேகப்பந்துவீச்சாளர் சிவம் மவிக்கு 6 கோடி ரூபாய் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவம் மவி காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடவில்லை.சிவம் மவிக்கு அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் இத்தனை மடங்காக கொடுத்து குஜராத் அணி சொந்த செலவில் செய்வினை வைத்து கொண்டதாக ரசிகர்கள் விமர்சித்து உள்ளனர் .மும்பை இந்தியன்ஸ் அணி கேமரன் கிரினை 17 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்து இருக்கிறது.

கேம்ரான் கிரீனும் அதிகம்

கேம்ரான் கிரீனும் அதிகம்

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையை கேம்ரான் கிரீன் பெற்று இருக்கிறார்.இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதை வைத்து மும்பை அணியினர் இவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கேம்ரான் கிரின் அதன் பிறகு பெரிய தாக்கத்தை எந்த போட்டியிலும் ஏற்படுத்தவில்லை. மேலும் கேம்ரானுக்கு காயம் இருப்பதால் போட்டிகளில் அதிகளவில் பந்து வீசுவதில்லை. இதனால் கேமிரான் கிரினுக்கு இரண்டு மடங்கு அதிக பணத்தை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாந்து விட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, December 24, 2022, 10:37 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+