Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலம்.. பெங்களூரு அணி யாரை குறி வைக்கும்.. குறைந்த பணத்தில் யாரை வாங்கும்? சிக்கல் என்ன?

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை அணிகளுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தான். மூன்றாவது பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணியாக கருதப்படும் ஆர் சி பி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.

கடந்த முறை பிளே ஆப் வரை சென்ற ஆர் சி பி அணி குவாலிபையர் இரண்டில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. ஆர் சி பி அணி விடுவித்த வீரர்கள் யாரும் பிளேயின் லெவனில் இருந்தவர்கள் அல்ல.

தற்போது ஆர்சிபி அணியிடம் 8 கோடியே 75 லட்சம் ரூபாய் மட்டும் தான் இருக்கிறது .இது ஐபிஎல் மினி ஏலத்தில் குறைந்தபட்ச கையிருப்பு கொண்ட இரண்டாவது அணியாகும்.

7 வீரர்கள்

7 வீரர்கள்

இவர்களை விட கொல்கத்தா 7.5 கோடி ரூபாய் மட்டுமே வைத்திருக்கிறார்கள். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு பெங்களூரு அணி ஏழு வீரர்களை வாங்க வேண்டும். இதில் இரு வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். ஆர் சி பி அணி ஏலத்திற்கு முன்பே ஜேசன்பெகுரண்டாப் என்ற ஆஸி வேகப்பந்துவீச்சாளரை மும்பை இந்தியன்ஸ்க்கு அனுப்பி விட்டது.

வேகப்பந்துவீச்சாளர்

வேகப்பந்துவீச்சாளர்

இதனால் தற்போது மினி ஏலத்தை பயன்படுத்திக்கொண்டு ஜாஸ் ஹேசல்வுட்டுக்கு துணையாக ஒரு வேகப்பந்துவீச்சாளரரை ஆர் சி பி எடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் நாதன் குவாட்டர் நைல் , ஆடர் மிலன் ரீஸ் டோப்ளி ஆகியோரை குறிவைத்து எடுக்கலாம். முகமது சிராஜ் கடந்த சீசனில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. 15 போட்டிகளில் விளையாடி ஒரு ஓவருக்கு 10 ரன்கள் மேல் கொடுத்திருந்தார்.

யாருக்கு குறி

யாருக்கு குறி

இதனால் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை ஆர் சி பி அணி குறி வைக்கும். இஷாந்த் ஷர்மா, வைபவ், இஷாந்த் போரெல் சிவம் மவி போன்ற வீரர்களுக்கு ஆர் சி பி குறி வைக்கலாம். இதேபோன்று கூடுதலாக எம் அஸ்வின் போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் ஆர் சி பி அணிக்கு தேவைப்படுகிறார்கள். ஆர் சி பி அணியின் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக விராட் கோலி டுபிளசிஸ் ஆகியோருக்கு ஜோடியாக கூடுதலாக ஒரு இந்திய தொடக்க வீரர் கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.

பிரச்சினை என்ன?

பிரச்சினை என்ன?

மாயங் அகர்வால் போன்ற ஒரு வீரர் கிடைத்தால் அவரை தொடக்கத்தில் இறக்கிவிட்டு விராட் கோலி மூன்றாவது வீரராக களம் இறங்கி பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தலாம். ஆனால் பெங்களூர் அணியின் கையிருப்பு தொகை மிகவும் குறைவாக இருப்பதால் இதுபோன்ற பெரிய வீரர்களை அவர்கள் தேர்வு செய்வதில் பெரிய சிக்கல் ஏற்படும்.

Story first published: Friday, December 23, 2022, 6:45 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+