IPL 2023 - சென்னை அணியிடம் கைவசம் இருக்கும் தொகை? யாரை தேர்ந்து எடுக்க திட்டம்.. தோனி மாஸ்டர் பிளான்
சென்னை : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமான அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்கள் மாற்றம், தீபக் சாஹரின் காயம் என அனைத்தும் சென்னை அணியின் வெற்றியை பாதித்தது. இதனால் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே 9வது இடத்துடன் நிறைவு செய்தது.
இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி 9 வீரர்களை விடுவித்தது. இதில் பிராவோ , ஜெகதீசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சென்னை அணியிடம் கைவசம் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் உள்ளது. தற்போது சிஎஸ்கே அணியிடம் 18 வீரர்கள் உள்ளனர். தற்போது சிஎஸ்கே அணிக்கு தேவை ஒரே ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரும், ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளரும் தான். இதனால் கைவசம் உள்ள தொகையை யாருக்கு செலவு அளிப்பார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு வீரருக்கு அதிகபட்ச தொகையாக ஏலத்தில் இதுவரை 16 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே நினைத்தால் தாங்கள் விரும்பும் ஆல்ரவுண்டரை இவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியும். இதனால் பிராவோவுக்கு பதிலாக மாற்று ஆல்ரவுண்டரான சாம் கரனை சிஎஸ்கே அணி 18 கோடி ரூபாய் கொடுத்து கூட வாங்க முடியும். பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம் பணம் அதிகமாக இருந்தாலும், அவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட வீரர்களை வாங்க வேண்டும்.
இதனால், ஐதராபாத், பஞ்சாப் அணிகள் அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் வரை சாம் கரனுக்காக செலவிட முடியும். இதனால் சிஎஸ்கே அணி 16 கோடி ரூபாய் கொடுத்து கூட சாம் கரணை வாங்க முடியும். இதற்கு காரணம், சாம் கரண் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். இதனால் அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்யலாம். சாம் கரண் போல் பென் ஸ்டோக்சும், மினி ஏலத்தில் அதிக விலைக்கு போக கூடிய வீரராக இருப்பார்.
இதனால் சாம் கரண் கிடைக்கவில்லை என்றால் பென் ஸ்டோக்ஸ்க்கு சிஎஸ்கே பெருந்தொகை செலவிடும். இதனை போன்று வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டோமினிக் டிராக்ஸ், ஓடியன் ஸ்மித் ஆகியோரை பிளான் பியாக சிஎஸ்கே வைத்து கொள்ளலாம். மற்ற வீரர்களை 20 லட்சம் கொடுத்து கூட சிஎஸ்கே அணியால் வாங்க முடியும். அடுத்த சீசனில் தோனி, ராயுடு ஆகியோர் இருக்க வாய்ப்பில்லை. இதனால் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியிடம் கைவசம் பணம் இருக்கும்.


Click it and Unblock the Notifications