Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணிக்கு திரும்பிய ஆஸி. வேகம்.. சிஎஸ்கேக்கு எதிராக செம பிளான் தீட்டிய ரோகித்.. சமாளிக்குமா CSK

மும்பை : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸ்க்கு தொடக்கமே பின்னடைவாக அமைந்துள்ளது. மும்பை அணியில் ஏற்கனவே பும்ரா, ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

நடப்பு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ளும் போது மும்பை அணி ஜேசன் பெகுரண்டஃப், ஜோப்ரா ஆர்ச்சர், கேமிரான் கீரின் , டிம் டேவிட் ஆகிய 4 வீரர்களை வைத்து களமிறங்கியது. இதில் பெகுரண்டஃப் 3 ஓவரில் 37 ரன்களை விட்டு கொடுத்தார்.

IPL 2023 - Mumbai indians ropes in Riley meredith for jhye richardson

ஆல் ரவுண்டர் கேமிரான் கிரீன் 2 ஓவரில் 30 ரன்களை விட்டு கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 33 ரன்களை விட்டு கொடுத்தார். இதனால் மும்பை அணி தங்களது பிளானை மாற்றி கொள்ள முடிவு எடுத்துள்ளது. ரிச்சர்ட்சனுக்கு பதில் ஏற்கனவே மும்பை அணிக்காக விளையாடிய ரெய்லி மெர்டித்தை மும்பை அணி ஒப்பதம் செய்தது.

கடந்த சீசனில் மெர்டித் தொடக்க சில போட்டிகளில் சொதப்பினார். ஆனால், அதன் பிறகு சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த சீசனில் அவர் ஒட்டு மொத்தமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது மெர்டித் செம பார்மில் இருக்கிறார். நடந்து முடிந்த பிபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய மெர்டித் 21 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால், சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில் மெர்டித், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரை களமிறங்க உள்ளது. இதே போன்று கேமிரான் கிரீனை தொடக்க வீரராக பயன்படுத்த மும்பை இந்தியன்ஸ் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித்தின் இந்த திட்டத்தை தோனி முறியடிப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Friday, April 7, 2023, 17:10 [IST]
Other articles published on Apr 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+