Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 - சிஎஸ்கேக்கு தலைவலி கொடுக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. அதிரடி ஆல்ரவுண்டர்களை குறிவைக்க முடிவு

மும்பை : ஐபிஎல் அடுத்த சீசனுக்காக ஆரம்ப பணிகளை மேற்கொள்ள தற்போதே அனைத்து பணிகளும் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடி தரும் விதமாக பஞ்சாப் அணி செயல்பட உள்ளது.

ஆம், சிஎஸ்கே அணியில் ஏற்கனவே விளையாடிய அதிரடி ஆல்ரவுண்டரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க உள்ளது.

வலுவான அணி

வலுவான அணி

கடந்த சீசனில் சென்னையும், மும்பையும் படுதோல்வியை தழுவியது. இதனால் அடுத்த சீசனுக்கு பலமான அணியை உருவாக்க இரு அணிகளும் முடிவு எடுத்தது. இந்த நிலையில், மும்பை அணி கடந்த ஆண்டே பலமான அணியை இறுதி செய்தது. தற்போது ரோகித், இஷான் கிஷன், சூரியகுமார், பிராவிஸ், ஸ்டப்ஸ், பொலார்ட், பும்ரா, ஆர்சர் என வலுவான அணியை தயாரித்துள்ளது.

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

சென்னை அணியை பொறுத்தவரை வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களான ஆடம் மிலின், கிறிஸ் ஜோர்டனை சிஎஸ்கே அணி விடுவித்துள்ளது. அதற்கு பதிலாக இம்முறை ஏலத்தில் பங்கேற்க உள்ள சாம் கரனையும், டெல்லி அணி விடுவித்துள்ள ஷர்துல் தாக்கூரையும் சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறது. தீபக் சாஹரும் உடல் தகுதியுடன் இருந்தால், சென்னை அணி ஒரு வகையில் பலமான அணியை தயாரித்துவிடும்.

பங்கேற்கும் நட்சத்திரங்கள்

பங்கேற்கும் நட்சத்திரங்கள்

இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமிரான் கிரீன் மற்றும் இங்கிலாந்து அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் சாம் கரனும் வருகிறார். இதில் சிஎஸ்கே குறி சாம் கரன் தான். ஆனால் பஞ்சாப் அணி, இந்த மூன்று வீரர்களையும் தங்களது அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் திட்டம்

பஞ்சாப் திட்டம்

இதற்காக மினி ஏலத்தில் 35 கோடி ரூபாய் பணத்தை அதிகபட்சமாக வைத்திருக்கும் வகையில் பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளது. அதன் படி அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஷாரூக்கான், மாயங் அகர்வால், ஒடியன் ஸ்மித் ஆகியோரை விடுவித்து, இந்த 3 வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களையும் வாங்க பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Saturday, November 5, 2022, 11:06 [IST]
Other articles published on Nov 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+