Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ப்பூரிலும் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள்.. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்.. இன்னிக்கும் போல்ட் இல்லையா?

ஜெய்ப்பூர்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் சென்னை அணி அடைந்த தோல்விக்கு ஜெய்ப்பூரில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: Rajasthan Royals Captain Sanju samson won the toss and chose to bat first against CSK

ஜெய்ப்பூர் மைதானத்தின் பிட்சை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதமாக உள்ளது. அதேபோல் ஒருபக்க பவுண்டரி எல்லை 66 மீட்டர் தூரமாகவும், இன்னொரு பக்க பவுண்டரி எல்லை 78 மீட்டர் தூரமாகவும் அமைந்துள்ளது. இதனால் குறைந்த தூரம் கொண்ட பவுண்டரி எல்லையை இரு அணிகளும் பயன்படுத்த நினைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் பிட்ச்சில் அதிக பவுன்ஸ் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆடம் சாம்பா சேர்க்கப்பட்டுள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் போல்ட் சேர்க்கப்படவில்லை. சென்னை அணி தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஜெய்ப்பூர் மைதானத்திலும் அனைத்து திசைகளிலும் சென்னை அணியின் ரசிகர்களே அதிகமாக கூடியுள்ளனர்.

ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், படிக்கல், சஞ்சு சாம்சன், ஹெட்மயர், துருவ் ஜுரெல், அஸ்வின், ஹோல்டர், ஆடம் சாம்பா, சந்தீப் சர்மா, சாஹல்

சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, மொயின் அலி, சிவம் துபே, ஜடேஜா, எம்எஸ் தோனி, மதிஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, ஆகாஷ் சிங்

Story first published: Thursday, April 27, 2023, 19:09 [IST]
Other articles published on Apr 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+