Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் நட்பு மலர்ந்தது.. பகையை மறந்த ஜடேஜா.. சிஎஸ்கேவில் தக்க வைக்கப்பட்டதற்கு ஜடேஜாவின் ரியாக்சன்

சென்னை : பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் ரிட்டன்சன் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை தக்க வைத்து கொண்டது.

ஜடேஜாவுக்கும், தோனிக்கும் இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அணி தொடர்பான தனது பழைய பதிவுகளை எல்லாம் ஜடேஜா நீக்கினார்.

மேலும். தம்மை அணியை விட்டு விடுவிக்கும் படி ஜடேஜா மறைமுகமாக போர்க்கொடி தூக்கினார். ஆனால், இதற்கு சிஎஸ்கே ஒப்பு கொள்ளவில்லை.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

மேலும் டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு அணிகள் ஜடேஜாலை தங்களுக்கு வழங்கும் படி விடுத்த கோரிக்கையையும், சிஎஸ்கே நிராகரித்தது. இந்த நிலையில், ஜடேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிஎஸ்கே அணி நிர்வாகம், ஜடேஜா எந்த அளவிற்கு அணியில் முக்கியமான வீரர் என்பதை எடுத்துரைத்தது.

மறந்த ஜடேஜா

மறந்த ஜடேஜா

சென்னை ஆடுகளத்திற்கு ஜடேஜாவின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜாவை வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தோனி திட்டியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்றும், அதனை தாமும் மறந்துவிட்டதாக கூறி, சென்னை அணியில் தொடர ஜடேஜா ஒப்பு கொண்டார்.

ஜடேஜா ரியாக்சன்

ஜடேஜா ரியாக்சன்

இந்த நிலையில், ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்கவைத்து கொண்டதை அடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் ஜடேஜா புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தோனிக்கு முன் ஜடேஜா தலையை குனிந்து மரியாதை செலுத்தும் காட்சி இடம்பெற்றது. அதில், அனைத்துமே சிறப்பாக தான் உள்ளது. மீண்டும் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.

பிரச்சினை இல்லை

பிரச்சினை இல்லை

இதன் மூலம், தனக்கும், தோனிக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், மீண்டும் சிஎஸ்கே உடனான பந்தத்தை புதுசாக தொடங்குகிறோம் எனற பொருள்படும் வகையில், அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஜடேஜா, மொயின் அலி, மகீஷ் தீக்சணா, மிட்செல் சாண்டனர் ஆகியோரின் இருப்பால் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சு பலமாக காட்சி அளிக்கிறது.

Story first published: Wednesday, November 16, 2022, 10:31 [IST]
Other articles published on Nov 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+