Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனை வீழ்த்திய கேப்டன்.. ராணா கேட்சை பறந்து சென்று பிடித்த மார்க்ரம்.. உற்சாகமான காவ்யா மாறன்!

ஐதராபாத்: கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவை ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் மிரட்டலான கேட்ச் பிடித்து வெளியேற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 47வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் டேவிட் வீசா நீக்கப்பட்டு ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் வழக்கம் போல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

IPL 2023: SRH Captain Aiden Markram dismissed KKR Captain Nitish Rana with an extra ordinary catch at Hyderabad

இந்த நிலையில் கேப்டன் நிதிஷ் ராணா - அதிரடி வீரர் ரிங்கு சிங் கூட்டணி சேர்ந்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த கூட்டணி கொல்கத்தா அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. 9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 73 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கார்த்திக் தியாகி வீசிய 10வது ஓவரில் இரு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார்.

IPL 2023: SRH Captain Aiden Markram dismissed KKR Captain Nitish Rana with an extra ordinary catch at Hyderabad

இதன் காரணமாக கொல்கத்தா அணியின் ஸ்கோர் 11 ஓவர்கள் முடிவில் 95ஆக உயர்ந்தது. ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஐதராபாத் அணியின் கைகளில் இருந்து வெளிவந்த சூழலில், ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்த ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்தை கைகளில் எடுத்தார். 12வது ஓவரை வீசிய மார்க்ரம் பந்துவீச்சை அட்டாக் செய்ய நினைத்து நிதிஷ் ராணா சிக்சர் அடிக்க முயன்றார்.

IPL 2023: SRH Captain Aiden Markram dismissed KKR Captain Nitish Rana with an extra ordinary catch at Hyderabad

ஆனால் அது டாப் எட்ஜாக பந்துவீசிக் கொண்டிருந்த எய்டன் மார்க்ரம், லாங் ஆன் திசை வரை வேகமாக ஓடி சென்று டைவ் அடித்து கேட்ச்சை பிடித்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடப்பு சீசனிலேயே மிகச்சிறந்த கேட்ச் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனை பார்த்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

Story first published: Thursday, May 4, 2023, 21:05 [IST]
Other articles published on May 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+