Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs DC: "தனது கோட்டையில் கங்குலியை வம்புக்கு இழுத்த கிங் கோலி" ரசிகர்களின் தெறி மீம்ஸ் இதோ!

பெங்களூரு: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் 174 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கி மீம்ஸ் பற்றி பார்க்கலாம்.

IPL 2023: Stunning memes from Social Media after RCB beat Dc by 23 Runs

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 33 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஒரு மைதானத்தில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர் சாதனையை விராட் கோலி படைத்தார். இதனை சிங்கம் படத்தில் சூர்யாவை மிரட்டுவதற்காக வரும் பிரகாஷ்ராஜ், "இது மயில்வாகனம் கோட்டை டா" என்று வசனம் பேசுவார். அதனை விராட் கோலிக்கு மாற்றி, "இது விராட் கோலி கோட்டை டா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning memes from Social Media after RCB beat Dc by 23 Runs

பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், வேகமாக ஸ்கோரை உயர்த்த இம்பேக்ட் பிளேயராக அனுஜ் ராவத் களமிறக்கப்பட்டார். 16வது ஓவரில் களமிறங்கி இறுதிவரை விளையாடிய அனுஜ் ராவத், 22 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில், "ச்ச்ச... என்னா இம்பேக்ட் டா" என்று சென்னை - 28 நடிகர் ஏழுமலை சொல்வதை டெல்லி வீரர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஃபன் ரகம்.

IPL 2023: Stunning memes from Social Media after RCB beat Dc by 23 Runs

20 ஓவர்களில் ஆர்சிபி அணி 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு மைதானத்தில் இந்த இலக்கை எளிதாக எட்டிவிடலாம் என்று கணிக்கப்பட்டது. ஏற்கனவே 200 ரன்கள் அடித்தும் லக்னோ அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதனால் டாக்டர் படத்தில் வரும் கடத்தல் காட்சியில் சொல்லப்படும், "என்னா மூஞ்சி இது.. இதுலாம் போனி ஆகாது" என்று வசனம் வரும். அதனை ஆர்சிபி பவுலர்கள் பேசுவது போல், "என்னடா டோட்டல் இது.. இத வச்சுலாம் டிஃபெண்ட் பண்ண முடியாது" என்று உருவாக்கப்பட்ட மீம் அட்ராசக்க ரகம்.

IPL 2023: Stunning memes from Social Media after RCB beat Dc by 23 Runs

ஆர்சிபி அணியின் ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் 15வது முறையாக ஐபிஎல் தொடரில் டக் அவுட்டாகி சாதனை படைத்தார். இதனை தாஸ் படத்தில் வடிவேலு டாய்லெட் சுத்தம் செய்யும் பெண்ணிடம் அடி வாங்கியதை ஜெயம் ரவி பார்த்துவிடுவார். வடிவேலு வெளிவந்த பின், என்னாய்யா இது என்று ஜாலியாக அடிப்பார். அதனை அப்படியே வடிவேலுவாக தினேஷ் கார்த்திக்கையும், ஜெயம் ரவியாக ரசிகர்களையும் மாற்றி, "என்னடா மோஸ்ட் டக் அவுட் சாதனை" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

IPL 2023: Stunning memes from Social Media after RCB beat Dc by 23 Runs

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 போட்டிகளில் விளையாடி 34 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். முன்னதாக இந்திய அணியில் இடம்கிடைக்காத போது இன்ஸ்டாகிராமில் சாய் பாபா என்று பதிவிட்டு கடவுளிடம் வேண்டுதல் வைத்து வந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் வாய்ப்புகள் கிடைத்தும் பிரித்வி ஷா சரியாக விளையாடவில்லை. இதனை கில்லி படத்தில் வரும் விஜயை, அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி, " நானும் பாத்துட்டு தான்டா இருக்கேன்.. எப்போ அந்த அரியர்ஸை முடிப்பேன் என்று" வசனம் பேசி இருப்பார். அதனை விஜயாக பிரித்வி ஷாவையும், அப்பாவாக சாய் பாபா, "நானும் பாத்துட்டு தான்டா இருக்கேன்" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் மெர்சல் ரகம்.

IPL 2023: Stunning memes from Social Media after RCB beat Dc by 23 Runs

டெல்லி வீரர் ஆமான் கான் 18 ரன்களில் இருந்த போது, சிராஜ் பந்துவீச்சில் அடித்த பந்தை விராட் கோலி கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச்-க்கு பின் டெல்லி ஓய்வறையில் இருந்த கங்குலியை விராட் கோலி ஒரு பார்வை பார்த்தார். ஏற்கனவே இருவரின் உறவும் மோசமாக இருந்த நிலையில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் விராட் கோலி வம்புக்கு இழுத்தார். இந்த காட்சியையும், தெறி படத்தில் வில்லனின் மகனை கொன்றுவிட்டு, நான் தான் கொலை செய்தேன் என்று விஜய் சொல்லிட்டு நடப்பதையும் வைத்து உருவாக்கி மீம் கூல்பம்ப் ஃபீல்.

Story first published: Saturday, April 15, 2023, 21:42 [IST]
Other articles published on Apr 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+