மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியின் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றையப் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி களமிறங்கினார். பணிச்சுமை காரணமாக கேப்டன்சியில் இருந்து விலகிய விராட் கோலி, நீண்ட நாட்களுக்கு பின் கேப்டனாக களமிறங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை சிங்கம் - 2 படத்தில் நடிகர் ரகுமான் சூர்யாவை பார்த்து Back to Police என்று கேட்கும் போது, சூர்யா Always a Police என்று பதில் அளிப்பார். அதனை அப்படியே சூர்யாவாக விராட் கோலியை மாற்றி, Back to the Captain என்று கேட்பது போலவும், அதற்கு விராட் கோலி, always Captain என்று பதில் அளிப்பது போலவும் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலி கேப்டனாக ஆடிய இந்தப் போட்டியில் சிராஜ், ஆர்சிபி அணிக்கு தனியாளாக வெற்றியை தேடி கொடுத்தார். இதனை பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ பேசும், என் அண்ணனுக்கு நான் தான்டா பண்ணுவேன் என்ற வசனத்தை சிராஜ் பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

நேற்றையப் போட்டியில் காயம் காரணமாக டூ பிளஸிஸ் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே இறங்கி பேட்டிங் செய்தார். காயத்தோடு விளையாடிய போதும் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை. 32 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 56 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதனை மாவீரன் படத்தில் ராம் சரண் போர்க் களத்தில் 100 பேரை வீழ்த்தி ருத்ரதாண்டவம் ஆடும் காட்சியோடு ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. பலரும் அவரின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டை விமர்சித்து வருகின்றனர். அதேபோல் நேற்றையப் போட்டியிலும் விராட் கோலி 125.5 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் 59 ரன்கள் சேர்த்திருந்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில், விஐபி படத்தில் தனுஷ் பேசும், "இங்க எல்லாத்துலயும் ஓரவஞ்சனை" என்ற வசனத்தை கேஎல் ராகுல் பேசுவது போல் உருவாக்கப்ப்பட்டுள்ள மீம் நக்கல்.

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப் மற்றும் பர்பிள் கேப் இரண்டையும் ஆர்சிபி அணியின் சிராஜ் மற்றும் டூ பிளஸிஸ் கைப்பற்றியுள்ளனர். டூ பிளஸிஸ் 6 போட்டிகளில் 343 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் சிராஜ் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவர்கள் இருவரும் ஆரஞ்ச் கேப் மற்றும் பர்பிள் கேப் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து, மங்காத்தா படத்தில் பணத்தை திருடிச் செல்லும் அஜித், அர்ஜுன் ஆகியோருடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.