For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சூனாபானா ஜடேஜா.. ஆட்டத்தை கலைத்த ராக்ஸ்டார்" வன்மத்தை இறக்கும் சென்னை ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்

ஜெய்ப்பூர்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மிரள வைக்கும் மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning Memes from Social media after RR beat CSK by 32 runs

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் போது அதிரடியாக ஆடி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் ஒரே ஓவரில் சென்னை அணியின் இளம் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே வீழ்த்தி அசத்தினார். முதல் சில போட்டிகளில் மோசமாக செயல்பட்ட அவர், தற்போது பர்பிள் கேப் போட்டியில் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் ஐபிஎல் தொடர் தொடக்கத்தில் ரசிகர்களால் கிண்டலுக்கு ஆளானார். இதனை பத்து தல படத்தில் சிம்புவை திட்டிவிட்டு மன்னிப்பு கேட்கும் மூதாட்டி, "உன்னை போய் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டோமேயா" என்று பேசுவார். அதே வசனத்தை துஷார் தேஷ்பாண்டேவை பார்த்து ரசிகர்கள் சொல்லுவது போல் உருவாக்கப்பட்ட மீம் செண்ட்மெண்டல் டச்.

IPL 2023: Stunning Memes from Social media after RR beat CSK by 32 runs

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி வீரர் பட்லர் வெறும் 21 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி அடுத்ததாக மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. மும்பை அணியுடம் வழக்கமாக சிறப்பாக பட்லர் ஆடுவார். அதனை கிண்டல் செய்யும் வகையில் கில்லி படத்தில் வரும் வில்லன் பிரகாஷ்ராஜ், "இந்த நல்ல போலீஸ் மட்டும் அவன பிடிக்கலனு வை.." என்று வசனம் பேசுவார். அதனை அப்படியே மாற்றி, "இதே பட்லர் மட்டும் மும்பை அணிக்கு எதிராக நல்லா ஆடுனாருனு வை" என்று உருவாக்கப்பட்ட மீம் அட்ரா சக்க ரகம்.

IPL 2023: Stunning Memes from Social media after RR beat CSK by 32 runs

நேற்றையப் போட்டியில் இம்பேக்ட் பிளேயராக வந்த ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதுவும் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் பரிதாபங்கள் கோபி பேசும், "டேய் இங்க வாடா" என்ற வசனத்தை மாற்றி, அப்படியே சென்னை அணி ரசிகர்கள் ராயுடு பார்த்து, "டேய் இம்பேக்ட்டூ.. இங்க வாடா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

IPL 2023: Stunning Memes from Social media after RR beat CSK by 32 runs

நேற்றையப் போட்டியில் கடினமான சூழலிலும் இளம் வீரர் சிவம் துபே சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். வெற்றிக்காக கடைசி வரை போராடினார். இதனை பாராட்டும் வகையில், வடசென்னை படத்தில் தனுஷ் பேசும், "ஜெய்க்கிறோமோ.. இல்லையோ.. சண்ட செய்யணும்.. இல்லனா நம்மள ஓடவிட்டுனே இருப்பானுங்க" என்ற வசனத்தை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

IPL 2023: Stunning Memes from Social media after RR beat CSK by 32 runs

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஜடேஜா, 15 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். வழக்கமாக விரைந்து ஆட்டமிழக்கும் ஜடேஜா, நேற்று இறுதிவரை ஆடினார். இதனால் தோனி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனை தவசி படத்தில் பைத்தியமாக நடித்த கதாபாத்திரத்திடம் போலி அட்ரஸை வடிவேலு சொல்லுவார். அப்போது "என்னா திமிரு இருக்கனும் உனக்கு" என்ற வசனம் வரும். அதனை மாற்றி ரசிகர்கள் ஜடேஜாவிடம் சொல்வது போல், "நீ அவுட் ஆகாம எங்க தலய பேட்டிங் ஆடவிடாம பண்ணிருக்கியே.. என்னா திமிரு இருக்கனும் உனக்கு" என்று உருவாக்கப்பட்ட மீம் தெறி.

IPL 2023: Stunning Memes from Social media after RR beat CSK by 32 runs

நேற்றையப் போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் இறங்கிய ஜடேஜா, முதல் 10 பந்துகளில் பெரிதாக பவுண்டரியை கூட விளாசாமல் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். ஆனால் அவரை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனை பஞ்சாயத்தை கலைக்கும் சூனா பானா கதாபாத்திரமாக ஜடேஜாவை சித்தரித்து உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

IPL 2023: Stunning Memes from Social media after RR beat CSK by 32 runs

அதேபோல் நேற்றையப் போட்டியில் ஜடேஜாவுக்கு பதில் தோனி களமிறங்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் 13வது ஓவரின் போதே 15 ரன்ரேட்டில் ஆட வேண்டிய நிலை உருவாகியது. இதன் காரணமாக தோனி களமிறங்கவில்லை என்று தோனி ஹேட்டர்கள் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். அதில் கூல் ஊற்றுவதற்காக வீட்டை எழுதி கேட்கும் வடிவேலுவை வெட்ட வரும் ஒருவர், கண்களை மூடினால் தான் சரியாக வெட்டுவேன் என்று சொல்லுவார். அதற்கு வடிவேலு, "இந்த வியாதி வேற இருக்காடா உனக்கு" என்பார். அதனை அப்படியே ரசிகர்கள் தோனி, ஏன்யா இந்த மேட்ச்ல இறங்கல என்று கேட்கும் கேள்விக்கு, ரன் ரேட் கம்மியா இருந்தா தான்டா இறங்குவேன் என்று பதில் அளிப்பது போலும், அதற்கு வடிவேலுவின் இந்த வியாதி வேற இருக்காடா உனக்கு என்ற வசனத்தை வைத்து உருவாக்கிய மீம் ஃபன்.

Story first published: Friday, April 28, 2023, 8:04 [IST]
Other articles published on Apr 28, 2023
English summary
RR vs CSK: Rajasthan Royals beat Chennai super kings by 32 runs. After this CSK fans crticized the performance of every players with Stunning Memes in Social media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+