நீலாம்பரியாக மாறிய ரசிகர்கள்.. ஹைலட்ஸையே இப்படி பார்க்கிறீங்க.. சென்னை ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்!
சென்னை: கிட்டத்தட்ட 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையும், சிஎஸ்கே வெற்றிபெற்ற தருணங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்களை வைத்து சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட மீம்ஸை பார்க்கலாம்.

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்று சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தருணத்தை சிஎஸ்கே ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர். இதனை படையப்பா படத்தில் ரஜினி - செளந்தர்யா கல்யாண கேசட்டை நீலாம்பரியான ரம்யா கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பார். இந்த இரண்டையும் ஒப்பிட்டு, "இறுதிப்போட்டிக்கு பின் சாதாரண சிஎஸ்கே ரசிகனின் நிலை" என்று உருவாக்கப்பட்டுள்ல மீம் வேற லெவல்.

2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த ஐபிஎல் தொடர், முடிவடைந்ததால் பலரும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனை கில்லி படத்தில் த்ரிஷாவை விமான நிலையத்தில் ஏற்றிவிட்டு கிளம்பும் விஜய், அவர் இருப்பது போன்ற நினைவில் "தனலட்சுமி உட்காரு" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "அம்மா.. இந்நேரம் மேட்ச் போட்டுருப்பான்.. சீக்கிரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வைங்க" என்று மகன் கேட்பது போலும், அதற்கு அம்மா மற்றும் அப்பா, "டேய் ஐபிஎல் நேற்றோடு முடிஞ்சது.. போய் வேலையா பாரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஹார்ட் பிரேக்.

அதேபோல் சிஎஸ்கே கொண்டாட்டங்களை பார்க்கவே ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். ஒவ்வொரு புகைப்படம், வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே கொண்டாட்டங்களை புகைப்படமாக பதிவிட்டு, "Pursuit of Happiness" படத்தின் இறுதியில், "This Part of My Life.. This Little Part is called happiness" என்று வில் ஸ்மித் சொல்லுவார். அதனை சிஎஸ்கே ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

அதேபோல் சிஎஸ்கே அணியின் நட்சத்திர அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளார். இவருக்கான மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆலோசித்து வருகின்றனர். இதனை பெண் கேட்டு வருவது போன்ற பிரபல ஆன்லைன் வீடியோவை மாற்றி சிஎஸ்கேன் சீஇஓ காசி விஸ்வநாதன், அம்பானி மற்றும் நீட்டா அம்பானியிடம், "2018ல் 32 வயசான பழைய ராயுடுவை கொடுத்த மாதிரி, இப்போதும் 32 வயசான சூர்யகுமார் யாதவை கேட்டு வந்துருக்கோம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள வெறித்தனம்.


Click it and Unblock the Notifications