Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2023: ”கேட்ச் பிடிக்க வந்தா கொல பண்ணிடுவேன்” சிஎஸ்கே ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ் இதோ!

பெங்களூரு: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning Memes of Fans after CSK won by 8 Runs against RCB at Chinnaswamy Stadium

சென்னை அணியின் இளம் வீரர் ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அசத்தினார். ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் பந்துகளை இமாலய சிக்சர்களாக மாற்றி அசத்தினார். இவர் முன்னாள் ஆர்சிபி அணி வீரராவார். இதனை சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் நாயகி மாரியம்மாள் பேசும், "வந்துட்டான் பாரு.. என் நிம்மதிய கெடுக்க" என்ற வசனத்தை, "வந்துட்டான்.. மாஜி ஆர்சிபியன்.. எங்க நிம்மதிய கெடுக்க" என்று ஆர்சிபி ரசிகர்கள்புலம்புவது போல் உருவாக்கப்பட்ட மீம் அட்ராசக்க ரகம்.

IPL 2023: Stunning Memes of Fans after CSK won by 8 Runs against RCB at Chinnaswamy Stadium

அதேபோல் ஷிவம் துபே அதிரடியை வைத்து இன்னொரு அசத்தல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சிவாஜி படத்தில் வரும் வில்லன் பேசும், "ஆதினா.. பொட்டு வச்சுட்டு பொங்கல் சாப்பிடுவான்னு பாத்தியா" என்ற வசனத்தை, "துபேனா கிளீன் சேவ் பண்ணிட்டு இண்டர்வியூக்கு போறவன்னு நினைச்சியா.. ஷிவம் துபேடா.. 2022 ஆர்சிபிக்கு எதிரா வச்ச ரெக்கார்ட் எடுத்து பாரு" என்று உருவாக்கப்பட்ட மீம் மாஸ்.

IPL 2023: Stunning Memes of Fans after CSK won by 8 Runs against RCB at Chinnaswamy Stadium

ஆர்சிபி அணி வெற்றிபெற சென்னை அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை எளிதாக டிஃபெண்ட் செய்யலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். அதனை வடிவேலுவின் கோட் நம்பர் காமெடியில் சிங்கமுத்து பேசும், "கொஞ்சம் பொறு.. மெஷின் சொல்லும்.. பில் சொல்றேன்" என்று வசனத்தை, "கொஞ்சம் பொறு.. துஷார் தேஷ்பாண்டே ஸ்பெல் முடியட்டும்" என்று உருவாக்கப்பட்ட மீம் கலக்கல்.

IPL 2023: Stunning Memes of Fans after CSK won by 8 Runs against RCB at Chinnaswamy Stadium

ஆர்சிபி அணியின் டூ பிளஸிஸ் - மேக்ஸ்வெல் கூட்டணி சிக்சர்களாக விளாசியது. அதுமட்டுமல்லாமல் கொடுத்த கேட்ச்களையும் சிஎஸ்கே வீரர்கள் தவறவிட்டனர். அதனை பாட்ஷா படத்தில் வரும் "பீசு பீசா கிழிக்கும் போதும் இயேசு போல பொரும பாரு" என்று வரிகளுடன் தோனிடின் முகத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2023: Stunning Memes of Fans after CSK won by 8 Runs against RCB at Chinnaswamy Stadium

அதேபோல் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் கொடுத்த 2 கேட்ச்களை தீக்சனா தவறவிட்டார். இரு கட்டத்தில் தோனி அடுத்தடுத்து இரு கேட்ச்களை பிடித்தார். இதனை ஏய் படத்தில் வரும் வடிவேலு பேசும், "நீ பேசின கொல பண்ணிடுவேன்" என்ற வசனத்தை தீக்சனாவை பார்த்து தோனி, "நீ கேட்ச்-க்கு வந்தா கொலை பண்ணிடுவேன்" என்று உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

Story first published: Monday, April 17, 2023, 23:30 [IST]
Other articles published on Apr 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+