Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"3 விக்கெட் மேல வண்டி ஓடாது போல" டெல்லியை வச்சு செய்யும் ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ் இதோ!

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Stunning Memes of Hyderabad beat Delhi Capitals by 9 runs

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி சார்பாக அபிஷேக் சர்மா 67 ரன்களும், கிளாஸன் 53 ரன்கள் விளாசினர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை மங்காத்தா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்குமார் மற்றும் அர்ஜுன் இருவரும் பணத்தை எடுத்து செல்லும் காட்சியோடு ஒப்பிட்டு, அபிஷேக் சர்மா மற்றும் கிளாஸன் எஸ்கேப்பாகி டெல்லி அணியை வீழ்த்த காரணமாக அமைந்ததாக உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

IPL 2023: Stunning Memes of Hyderabad beat Delhi Capitals by 9 runs

சில வாரங்களுக்கு ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக், சதம் விளாசி அசத்தினார். அப்போது இந்திய ரசிகர்கள் வாயை அடைத்துவிட்டேன் என்று பேசி இருந்தார். ஆனால் சதம் விளாசிய பின், அடுத்து விளையாடிய 4 போட்டிகளில் ஒருமுறை கூட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனை பிகில் படத்தில் வரும் ராயப்பன், வில்லன் ஜாக்கி ஷெராஃபை தூக்கி வந்து உட்கார வைத்து அடிப்பார். அப்போது, "அங்கயே உன்னையே செஞ்சுருப்பேன்.. வாய் பேசுற நீ" வசனம் வரும். அந்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு ஹாரி ப்ரூக்கை விமர்சித்துள்ள மீம் அதிரடி.

IPL 2023: Stunning Memes of Hyderabad beat Delhi Capitals by 9 runs

நேற்றையப் போட்டியில் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஐதராபாத் அணி பதிலடி கொடுத்தது. குறிப்பாக வார்னரை டக் அவுட்டில் வீழ்த்தியது. இதனை ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கொண்டாடுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அட்ரா சக்க ரகம்.

IPL 2023: Stunning Memes of Hyderabad beat Delhi Capitals by 9 runs

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் முக்கிய வீரர் மணிஷ் பாண்டே, அபிஷேக் சர்மா வீசிய பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா பந்துவீசுவதற்கு முன்பாக கிரீஸிலிருந்து வெளியில் வந்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில், நடுவுக கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வரும் பக்ஸ் கதாபாத்திரத்தை கிண்டல் செய்யும் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

IPL 2023: Stunning Memes of Hyderabad beat Delhi Capitals by 9 runs

ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6வது தோல்வியை பதிவு செய்தது. இதனால் டெல்லி அணியை பயிற்சியாளர்களான கங்குலி மற்றும் ரிக்கி பாண்டிங் சோகத்தில் இருந்தனர். இதனை தன்னை அடித்ததற்காக வடிவேலு தனது ரவுடி குருநாதரை அழைத்து வந்து அடிங்கடா பார்ப்போம் என்று சவால் விடுவார். அப்போது வடிவேலுவின் குருநாதன் மீதும் சிலர் சாணியை எடுத்து வீசிடுவார்கள். அப்போது வடிவேலுவை பிடிக்கும் குருநாதா கதாபாத்திரம், "டேய் ஊர் உலகமே பயந்துட்டு இருந்த என்ன கொண்டு வந்து அசிங்கப்படுத்திட்டல்ல" என்று சட்டையை பிடித்து வெட்டப் போவார். அப்போது கங்கு மற்றும் பாண்டிங் இருவரும் டெல்லி அணியை பிடித்து, "டேய் ஊர் உலகமே பயந்துட்டு இருந்த என்ன கொண்டு வந்து பயிற்சியாளரா போட்டு" என்று வசனம் பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

Story first published: Sunday, April 30, 2023, 7:53 [IST]
Other articles published on Apr 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+