SRH vs DC: "அவன் பொருளை எடுத்து அவனையே போடனும்" ஐதராபாத்தை வேட்டையாடிய வார்னர்.. வெறித்தன மீம்ஸ்!
ஐதராபாத்: 16வது ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி மிகவும் கஷ்டப்பட்டு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அந்த இலக்கையும் எடுக்க முடியாமல் ஐதராபாத் அணி மோசமாக தோல்வியடைந்தது. இதனை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஆசிரியரான கூத்த பெருமாள் பேசும் வசனத்தை டெல்லி, ஐதராபாத் அணிகளை பார்த்து ரசிகர்கள் பேசுவதாக, "முக்கி, முக்கி..145 ரன்கள் டார்கெட் செட் செய்த நீ ஒரு பன்னாடை.. அந்த 145 ரன்ஸையும் சேஸ் பன்ன முடியாம இருக்க நீ ஒரு பரதேசி" என்று உருவாக்கப்பட்ட மீம் அட்ரா சக்க ரகம்.

நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. ஆனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை பசுபதி படத்தில் வரும் விவேக் புகைப்படத்தை வைத்து, முதல் 6 போட்டிகளில் உயர் அதிகாரியை பார்த்து அழுவது போலவும், விக்கெட்ஸ் வீழ்த்திய பின் தலையை சீவும் விவேக் போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

டெல்லி அணி நேற்றையப் போட்டியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வார்னர், அக்சர் படேலை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் நடப்பு சீசனில் சரியாக விளையாடவில்லை. அது நேற்றையப் போட்டியிலும் தொடர்ந்தது. கத்தி படத்தில் விஜய் மற்றும் சதீஷை பார்த்து, பெரியவர்கள் 4 பேர் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளவா என்று கேட்பார்கள். அந்த வசனத்தை மாற்றி, டெல்லி அணியின் பயிற்சியாளர்களான பாண்டிங், வாட்சன், கங்குலி, பிரவீன் ஆம்ரே ஆகியோர் ஒன்றாக இணைந்து, "பேசாம நாங்களே இறங்கி பேட்டிங் ஆடட்டுமா?" என்று அக்சர், வார்னரிடம் கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை சிறிய இலக்கை டிஃபெண்ட் செய்து வென்ற பெருமை ஐதராபாத் அணிக்கு இருக்கும். ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிராகவே சிறிய இலக்கை டெல்லி அணி டிஃபெண்ட் செய்து வென்றுள்ளது. இதனை திருப்பாச்சி படத்தில் வில்லனிடம் பேசும் விஜய், "நீ குத்துனா மட்டும்தான் கத்தி குத்துமா.. நாங்க குத்துனா கத்தி குத்தாதா?" என்று வசனம் பேசுவார். அதேபோல் ஐதராபாத் அணியை பார்த்து டெல்லி அணி பேசுவது போல், "உனக்கு மட்டும் தான் சிறிய ஸ்கோர் டிஃபெண்ட் பண்ண தெரியுமா? ஏன் எங்களுக்கு தெரியாதா?" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

ஐதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு டேவிட் வார்னர் வெற்றிபெற்றுள்ளார். வெற்றிக்கு பின் வார்னர் ஆக்ரோஷமாக கொண்டாடவும் செய்தார். இதனை வடசென்னை படத்தில் வரும் கிஷோர் பேசும் வசனத்தை டெல்லி அணி பேசுவதாக, "அவன் பொருளை எடுத்து அவனேயே போடனும்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.


Click it and Unblock the Notifications