Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடராஜன் வெளியேற்றம்.. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங்.. அணித் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த டெல்லி

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் சில நாட்களுக்கு முன்பாக விளையாடிய போட்டியில், டெல்லி அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் இன்றையப் போட்டியில் ஐதராபாத் அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

IPL 2023: Sunrisers Hyderabad won the toss and chose to bat against Delhi Capitals

இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்ரன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் காயமடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அகில் ஹொசைன் மற்றும் அப்துல் சமத் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் டெல்லி அணியில் அமான் கானுக்கு பதிலாக இந்திய அணியின் யு19 கேப்டனாக செயல்பட்ட ப்ரியன் கார்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பேசுகையில், பனிப்பொழிவு இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் நிச்சயம் சிறப்பாக பேட்டிங் செய்த பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். எல்லா பரிச்சார்ந்த முயற்சிகளையும் முடித்துவிட்டு, இனி முடிவுகளை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகியுள்ளார். அவரது இடத்தை எளிதாக நிரப்ப முடியாது என்று தெரிவித்தார்.

ஐதராபாத் அணி விவரம்: ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் த்ரிப்பாட்டி, மார்க்ரம், கிளாசன், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், அகில் ஹொசைன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: மார்க்கோ யான்சன், விவ்ராந்த் சர்மா, கிளென் பிலிப்ஸ், மயங்க் டாகர், நடராஜன்

டெல்லி அணி விவரம்: டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனிஷ் பாண்டே, ப்ரியம் கார்க், அக்சர் படேல், ரிபல் படேல், குல்தீப் யாதவ், அன்ரிக் நார்கியே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அபிஷேக் போரெல், கலீல் அஹ்மத், பிரவீன் துபே

Story first published: Saturday, April 29, 2023, 19:14 [IST]
Other articles published on Apr 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+