Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பைனலில் இப்படி ஒரு சாபமா? சேஸிங் டீம்க்கு சூனியம் வைத்த மாதிரி இருக்கே.. மாற்றுவாரா தல தோனி

அகமதாபாத் : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், தோனி சேஸிங் செய்வதே சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.

அதே போன்று ஹர்திக் பாண்டியாவும், என் மனது முதலில் பேட்டிங் செய்ய தான் கூறியது. ஆனால், நானும் பந்துவீச தான் முடிவு எடுத்திருந்தேன் என்று கூறினார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் வரலாற்றில் ஒரு சாபம் நிகழ்ந்திருக்கிறது.

IPL 2023 - unbelievable curse for chasing team in finals for odd season

அதாவது, ஒற்றைப்படை ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் சேஸிங் செய்த அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. 2009, 2011 ஆம் ஆண்டு சேஸிங் செய்த ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.

இதே போன்று 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டு சேஸிங் செய்த சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு சேஸிங் செய்த புனே அணயும், 2019 ஆம் ஆண்டு சேஸிங் செய்த சிஎஸ்கே அணியும் தோல்வி அடைந்திருக்கிறது.

2021ஆம் ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வென்ற போது கொல்கத்தா அணியும் சேஸிங் தான் செய்தது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மீண்டும் சிஎஸ்கே சேஸிங் செய்ய உள்ளது. இந்த சாபத்தை சிஎஸ்கே உடைக்குமா, இந்த முறையை சிஎஸ்கே மாற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Monday, May 29, 2023, 20:11 [IST]
Other articles published on May 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+