IPL 2023 -எந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்கள்.. பென் ஸ்டோக்ஸ், சாம் கரனுக்கு இங்கிலாந்து செக்
கொச்சி : ஐபிஎல் மினி இடத்தில் இன்று 450 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 273 பேர் இந்தியாவில் இருந்து பங்கேற்கிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்த 132 வீரர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளன. மொத்தமாக 87 இடங்களுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் 30 வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் பல்வேறு வீரர்கள் இன்று விலை போகாமல் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல் மினி ஏலத்தில் இன்று 205 கோடி ரூபாய் மொத்தமாக செலவழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் வீரர்களை தேர்வு செய்யும் முன் அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக பங்கேற்பார்களா என்ற சந்தேகம் அணி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி காயமடைந்த ஜோப்ரா ஆர்ச்சரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர் ஐபிஎல் தொடருக்கு முன் விளையாடாமல் போய்விட்டார். மேலும் ஐபிஎல் தொடரை ஒட்டி பல்வேறு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெற உள்ளது.

அணிகளின் சந்தேகம்
இதனால் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆசஸ் தொடர் ஜூன் மாதம் தொடங்குகிறது. இதன் காரணமாக இருநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரை விட்டு முன்பே சென்று விட்டால் அது அணிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவிடும்.
இதனால் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ ஒரு பட்டியலை ஐபிஎல் அணிகளுக்கு கொடுத்து இருக்கிறது .

பிசிசிஐ பட்டியல்
அதன்படி இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முழுமையாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் மற்றும் இலங்கை அணி வீரர்கள் ஐபிஎல்லில் தொடக்கத்தில் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் பி சி சி ஐ விளக்கம் அளித்துள்ளது.

இங்கிலாந்து வாரியம் செக்
இந்த நிலையில் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டிகளில் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங் மட்டும்தான் செய்ய வேண்டும் என்றும் பந்து வீச அனுமதி கிடையாது என்றும் அந்நாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதேபோன்று ஷாம்கரனுக்கும் இங்கிலாந்து வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு செல்லக்கூடிய வீரர்கள் என பென்ஸ் ஸ்டோக்ஸ் மற்றும் சாம்கரன் தான் கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கட்டுப்பாடு இருக்கிறதா?
காரணம் அவர்கள் அவர்களுடைய ஆல்ரவுண்ட் திறமை தான்.ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுபோன்று கட்டுப்பாடுகளை விதித்தால் அவர்கள் ஏலத்தில் எடுக்கும் அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இங்கிலாந்து வாரியம் இப்படி கட்டுப்பாடுகள் விதித்ததற்கு பி சி சி ஐ தான் காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏனெனில் இம்பேக்ட் வீரர்கள் என்ற விதியை அமல்படுத்திருப்பதால் பென் ஸ்டோக்ஸ் வெறும் பேட்டிங்கிற்கு மட்டும் அணிகளால் பயன்படுத்த முடியும்.

பிசிசிஐ விளக்கம் அளிக்குமா?
இதனை வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இப்படி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து பிசிசிஐ எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெறும் அறிவுறுத்தலை மட்டும்தான் வெளியிட்டிருப்பதாகவும், அதனை பின்பற்றுவதும் பின்பற்றாமல் போவதும் வீரர்களின் தனிப்பட்ட உரிமை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications