18.25 கோடி ரூபாய்க்கு சென்ற சாம் கரண்.. யாருடைய சாதனை உடைக்கப்பட்டது தெரியுமா? பஞ்சாப் அபாரம்
கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் நமது கணிப்பு படியே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஷாம்கரன் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டவர் ஷாம்கரன்.
இதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்று சாம்கரன் அசத்தினார். பல்வேறு அணிகளுக்கு சாம்கரன் போன்ற ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார்கள்ம் ஷாம்கரன் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்.
இதன் காரணமாக ஷாம் கரண் பெயர் வந்ததுமே பல்வேறு அணிகளும் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.

கடும் உயர்வு
சாம் கரணை ஏலத்தில் எடுக்க முதலில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 6 கோடி ரூபாய்க்கு மேல் சென்றதும், பெங்களூரு அணி பின்வாங்கியது. இதனையடுத்து, மும்பையும், ராஜஸ்தானும் கடுமையாக போட்டி போட்டு , இதனால் எதிர்பார்த்ததை போல சாம் கரணின் விலை கடுமையாக உயர்ந்தது.

மும்பை, சிஎஸ்கே விருப்பம்
11 கோடி ரூபாய்க்கு மேல் விலை சென்றதும், மும்பை அணி பின் வாங்கியது. அப்போது களத்தில் குதித்த சிஎஸ்கே விலையை மீண்டும் ஏற்றியது. அப்போது ராஜஸ்தான் ஏலத்தில் பின் வாங்க, பஞ்சாப் அணி கோதாவில் குதித்து சிஎஸ்கேக்கு கடுமையாக டஃப் கொடுத்தது. இதனையடுத்து லக்னோவும், பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியாக மாற, விலை 17 கோடி ரூபாய்க்கு மேல் சென்றது.

புதிய சாதனை
அப்போது மீண்டும் மும்பை அணி கம்பேக் கொடுக்க, விலை மேலும் அதிகரித்தது. இறுதியாக 18 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாம் கரண் படைத்தார். இதற்கு முன்பு 16.25 கோடி ரூபாய்க்கு கிறிஸ் மாரிஸை ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்ததே சாதனையாக இருந்தது.

தட்டி தூக்கிய பஞ்சாப்
பஞ்சாப் அணி சாம் கரணை தட்டி தூக்கியதால், சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாம் கரண் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்தார். பிராவோ இல்லாததால், சாம் கரண் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது நடக்க முடியாமல் போய்விட்டதால், இனி சிஎஸ்கே வேறு வீரரை தான் குறி வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications