Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"48000 பேர் 7ஆம் எண் ஜெர்ஸியை அணிந்து வந்தார்கள்".. தோனி ரசிகர்களால் மிரண்டு போன ஜஸ்டின் லாங்கர்

லக்னோ : ஐபிஎல் போட்டிகளின் போது 48,000 தோனி ரசிகர்களை லக்னோ மைதானத்தில், நேரில் பார்த்து மிரண்டு போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அது குறித்து ஒரு பேட்டியில் விவரித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக அளவில் தீவிரமான ரசிகர்களை கொண்டவர் என்றால் அது தோனி தான். 2023 ஐபிஎல் தொடரிலும் தோனி ரசிகர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. தோனி இடம் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் போட்டிகளில் எல்லாம் அந்த அணியின் மஞ்சள் நிற உடை அணிந்து, அதிலும் தோனியின் ஏழாம் எண் கொண்ட உடை அணிந்த ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிறைந்திருந்தனர்.

IPL 2024 48 000 MS Dhoni fans wearing No 7 jerseys came to Lucknow says Justin Langer

சிஎஸ்கே அணி விளையாடிய 14 போட்டிகளின் போதும் மைதானங்களில் தோனி ரசிகர்களே அதிக அளவில் நிறைந்து இருந்தனர். அதிலும் ரசிகர் கூட்டம் அதிகம் இல்லாத ஐபிஎல் அணிகளான பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற அணிகள் ஆடிய போட்டிகளின் போது அரங்கம் முழுவதும் தோனி ரசிகர்கள் மட்டுமே மஞ்சள் நிற உடை அணிந்து காணப்பட்டனர்.

அது குறித்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், "இது மிகவும் அற்புதமாக இருந்தது. நான் முதலில் இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இரண்டு முறை ஆடினோம். முதலில் சிஎஸ்கே அணி லக்னோவுக்கு வந்தார்கள். எங்கள் மைதானத்தின் இருக்கைகள் எண்ணிக்கை 50,000 இருக்கும். உண்மையில் அப்போது 48,000 ரசிகர்கள் தோனியின் ஏழாம் எண் சட்டையை அணிந்து மைதானத்தில் இருந்தனர். அதை என்னால் நம்பவே முடியவில்லை." என்றார்.

மேலும், "அதன் பின் நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆட சென்னைக்கு சென்றோம். அங்கே 98 சதவீதம் அல்ல, 100 சதவீதம் தோனி ரசிகர்கள் மட்டுமே இருந்தனர். அதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தியாவில் ஒரு நாயகனை கடவுள் போல வழிபடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பு நான் இந்தியாவில் ஒரு வீரராக விளையாடிய போது, சச்சின் டெண்டுல்கருக்கு அப்படி ரசிகர்கள் இருந்ததை பார்த்திருக்கிறேன். அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு நான் பயிற்சியாளராக இருந்தபோது விராட் கோலி மற்றும் தோனிக்கு அதிக ரசிகர்கள் இருந்ததை பார்த்தேன். ஆனால், இந்தியாவுக்கு வந்து இதை பார்க்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை" என்று ஜஸ்டின் லாங்கர் தன் வியப்பை வெளிப்படுத்தினார்.

Story first published: Friday, May 24, 2024, 13:55 [IST]
Other articles published on May 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+