லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் பல பரிட்சை நடத்த உள்ளது. ஐபிஎல் புள்ளி பட்டியலில் லக்னோ அணி தற்போது 6 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளும் இன்னும் சில நேரத்தில் லக்னோவில் பலப்பரீட்சை நடத்துகிறது.

லக்னோ அணியில் இடம் பிடித்து இருக்கும் ஸ்டார் வீரரான டேவுதட் படிக்கல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கப்பட்ட தேவுதட் படிக்கல், இதுவரை நான்கு இன்னிங்ஸில் விளையாடி வெறும் 22 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார் .இதனால் இன்றைய ஆட்டம் படிக்கலுக்கு மிகவும் முக்கியமானது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, புது பந்து கொஞ்சம் நகர்கிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். அந்த வகையில் கேல் ராகுல், குயிண்டன் டி காக் ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்க கூடும். படிக்கல் மூன்றாவது வீரராக களம் இறங்கும் வகையில் அவருக்கு தற்போது பார்ம் கை கொடுக்கவில்லை.
இன்றைய ஆட்டத்தில் மட்டும் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் இதுதான் அவருக்கு கடைசி ஆட்டமாக இந்த சீசனில் இருக்கும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் எனக்கு சந்தோஷம்தான். அப்படி இல்லை என்றால் தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். கலீல் அகமத் இடதுகை வீரர்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசுகிறார்.

இதனால் கலீல் அகமதை எதிர்கொள்ளும் போது வலது கை பேட்ஸ்மேன்கள் அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும். கே.எல். ராகுல் இன்றைய ஆட்டத்தில் மிகவும் முக்கியமான வீரராகவும் இருப்பார். அவருடைய கேப்டன்ஷிப் மிகவும் முக்கியம். இதேபோன்று குர்னல் பாண்டியா லக்னோ அணியில் மிகவும் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார். அவருடைய பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே கலக்கி வருகிறார். கடைசி போட்டியில் அவர் விளையாடிய போது விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதனால் தேர்வு குழுவினரின் கவனமும் அவர் மீது இருக்கும். மார்க்கஸ் ஸ்டோனிஸ்,நிக்ளோஸ் பூரான் ஆகியோர் நன்றாக விளையாடி வருகிறார்கள். இவர்கள் இருவருமே டெல்லி அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டோனிஷ் 104 ரன்கள், நிக்கோலஸ் பூரான் 178 ரன்கள் அடித்திருக்கிறார்கள். 140 என்ற அளவில் ஸ்டோனிஸ் ஸ்ட்ரைக் ரேட்டும், 170 என்ற அளவில் பூரானின் ஸ்ட்ரைக் ரேட்டும் உள்ளது.