துபாய் : ஐபிஎல் மினி ஏலம் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பல வீரர்களை ஒவ்வொரு அணியும் ஆர்வமுடன் எடுத்து வருகிறது. எப்போதும் சிஎஸ்கே அணி ஸ்டார் வீரர்களை குறி வைக்காமல் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.
ஆனால் இம்முறை ஆக்ரோஷமாக ஏலத்தில் பங்கேற்று ஆரம்பத்திலேயே வீரர்களை வாங்கி குவித்தது. இதேபோன்று ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி குறி வைத்து சிஎஸ்கே ஏலத்தில் கேட்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

எனினும் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் ஸ்டார் வீரர் ரச்சின் ரவீந்திராவை குறைந்த விலையில் ஏலம் எடுத்தது. இதைப் போன்று ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூரை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியது. இதை அடுத்து யாருமே எதிர்பாராத வகையில் நியூசிலாந்து வீரர் டாரல் மிட்சேலை சிஎஸ்கே அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
அவருடைய அடிப்படை விலை வெறும் ஒரு கோடியாக இருந்த நிலையில், அவருக்கு 14 மடங்கு கூடுதல் கொடுத்து. டாரல் மிச்சலை வாங்கி இருக்கிறது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் டாரல் மிட்செல் விலை போகவில்லை .ஆனால் இம்முறை 14 கோடி ரூபாய்க்கு சென்றிருக்கிறார். இதற்கு காரணம் கடந்த ஒரு ஆண்டாக டாரல் மிச்செல் அபாரமாக விளையாடி வருகிறார். குறிப்பாக நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாரல் மிச்சல் 500 ரன்கள் மேல் அடித்து அசத்தினார்.
இதனால் டாரல் மிச்செல் சிஎஸ்கே அணியின் நடு வரிசையில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.இந்த நிலையில் இந்த ஏலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங் இந்த ஏலத்தில் நாங்கள் வாங்கியதிலே முக்கிய வீரராக டாரல் மிச்சம் இருப்பார் என்று பாராட்டியுள்ளார்.அதேபோன்று ரச்சின் ரவீந்தராவை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு எடுத்ததெல்லாம் போனஸ் ஆக நாங்கள் கருதுகிறோம் என்றும் ஸ்டீவன் பிளமிங் கூறினார்.