Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கேவின் பலம் என்ன? பலவீனம் என்ன? தோனி செய்த மாஸ்டர் ஸ்டோர்க்

துபாய் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்றது இதில் சிஎஸ்கே அணி இரண்டு வெளிநாட்டு வீரர் மற்றும் நான்கு இந்திய வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது.

இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி மொத்தமாக 30 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவழித்து இருக்கிறது. தற்போது கையிருப்பில் ஒரு கோடி ரூபாய் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்றது, அம்பத்தி ராயுடு போன்ற சீனியர் ஓய்வு பெற்றது.

IPL 2024 auction - CSK Full squad review and strength- Weakness- analysis

வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது என்று பல குறைகள் சிஎஸ்கே அணியில் இருந்தது. தற்போது இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதனை சரி செய்ததா என்பதை பார்க்கலாம். பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருந்தாலும் அவர் சேப்பாக்கம் ஆடுகளத்தில் பெரியதாக எதுவும் சாதிக்கவில்லை.

இதனால் சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்று பார்க்காமல் ரச்சின் ரவீந்திரா மற்றும் டாரல் மிச்சல் என்ற இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வாங்கி இருக்கிறது. இவர்கள் இருவரும் அணியில் இருந்தால் சிஎஸ்கே வின் பந்துவீச்சு பலம் மற்றும் பேட்டிங் பலமும் ஒருசேர அதிகரிக்கும். இதேபோன்று சர்துல் தாக்கூர் என்ற இந்திய ஆல்ரவுண்டரை சிஎஸ்கே மீண்டும் அணிக்குள் சேர்த்து இருப்பது தோனி செய்த மாஸ்டர் ஸ்டோர்க்காக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தீபக்சாகர் ஷாகுல் தக்கூர் என்ற இரண்டு இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து அணியை தோனி வழிநடத்தலாம். இதேபோன்று அம்பத்தி ராயுடுவுக்கு பதில் மனிஷ் பாண்டே போன்ற வீரரை தான் சிஎஸ்கே எடுக்கும் என்று பலரும் கருதினர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் 20 வயது என்ற அதிரடி பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே 8 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே அணியில் ஷாயிக் ரசித், நிசாந்த் சித்து, சிவம் தூபே போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அதிலும் பிரச்சனை இல்லை. ஜெரால்ட் கோயிட்சே, மிச்சல் ஸ்டார்க் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இவர்கள் யாரும் கிடைக்கவில்லை என்று கூறி வங்கதேச வீரர் முஸ்தஃபீசூர் ரஹ்மானை சிஎஸ்கே வாங்கி இருக்கிறது. இதிலும் சிஎஸ்கே பாஸ் மார்க் வாங்கிவிட்டது.

இதேபோன்று தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் என்ற பெயரில் கான்வே ஏற்கனவே இருக்கிறார். எனினும் இந்திய விக்கெட் கீப்பர் வேண்டும் என்பதால் அவிநாஸ் ராவ் என்ற அதிரடி பேட்ஸ்மேனை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்திருக்கிறது. இந்த ஏலம் முடிவில் சிஎஸ்கே வின் பலம் நிச்சயமாக அதிகரித்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பலவீனம் என்றால் எதிரணி பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் இன்னும் சிஎஸ்கேவுக்கு கிடைக்கவில்லை .அந்த பணியை பதிராணாவும், முஸ்தபிசுர் ரஹ்மான் செய்ததால் சிஎஸ்கேவுக்கு ஆறாவது சாம்பியன் பட்டம் உறுதி.

Story first published: Tuesday, December 19, 2023, 22:43 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+