Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - சிஎஸ்கே பிளேயிங் லெவல் எப்படி இருக்கும்? தோனியின் மாஸ் சம்பவத்துக்கு ரெடியா?

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் தற்போது துபாயில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் சி எஸ் கே அணி 30 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவழித்து எஞ்சிய வீரர்களை வாங்கி இருக்கிறது.

இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே விடம் இருந்த குறைகள் சிலவற்றை தோனி சரி செய்து இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே வின் புதிய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

IPL 2024 auction -CSK Playing xi with multiple choice

தொடக்க வீரராக ருதுராஜ் கான்வே, டிவோன் கான்வே தான் இருப்பார்கள். வேண்டுமானால் டேரல் மிச்சலை தொடக்க வீரராக கூட சிஎஸ்கே பயன்படுத்தலாம். மூன்றாவது வீரராக ரஹானே அல்லது ஷாக் ரசித் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். நான்காவது வீரராக மோயின் அலி அல்லது ரச்சின் ரவீந்திரா வை சிஎஸ்கே அணி பயன்படுத்தலாம். ஐந்தாவது வீரராக சிவம் துபேவும், ஆறாவது வீரராக ஜடேஜாவும், ஏழாவது வீரராக தோனி ஆகியோர் இருப்பார்கள்.

எட்டாவது வீரராக தீபக்சாகர் ஒன்பதாவது வீரராக ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும். பத்தாவது வீரராக மகிஷ் தீக்சனா அல்லது மிச்சல் சாண்டனருக்கு வாய்ப்பு தரலாம். 11வது வீரராக பதிராணா அல்லது முஸ்தஃபீசூர் ரஹ்மானை சிஎஸ்கே களம் இறக்க கூடும்.

இதில் ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌத்ரி, துஷாந்த் தேஷ்பாண்டே, நிஷாந்த் சிந்து,ஷாயிக் ரசித் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகிய வீரர்களை சிஎஸ்கே ஒரு போட்டியிலாவது பயன்படுத்தி அவர்களுடைய எதிர்கால வீரர்கள் குறித்து முடிவு செய்ய வேண்டும். இதன் மூலம் 9 முதல் 10 வீரர்கள் அனைவருக்குமே பேட்டிங் தெரிந்த அளவுக்கு சிஎஸ்கே தங்களது அணியை தயார் படுத்தி இருக்க வேண்டும்.

சிஎஸ்கே பிளேயிங் லெவல்: 1,ருதுராஜ் கெய்க்வாட், 2,டிவோன் கான்வே/டேரல் மிட்செல், 3, ரஹானே/ஷாயிக் ரசித்/சமீர் ரிஸ்வி, 4, மோயின் அலி/ரச்சின் ரவீந்திரா, 5,சிவம் துபே, 6, ஜடேஜா, 7, தோனி, 8, தீபக் சாஹர், 9, ஷர்துல் தாக்கூர்/ஹங்கர்கேகர்,10, மகீஷ் தீக்சனா/ மிட்செல் சாண்ட்னர் 11, பதிரானா/முஸ்தபிசுர் ரஹ்மான்

Story first published: Tuesday, December 19, 2023, 23:20 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+