Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணிக்கு அடிமேல் விழும் அடி.. மேலும் ஒரு ஸ்டார் வீரருக்கு காயம்.. என்ன செய்ய போகிறார் தோனி

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் சிஎஸ்கே அணி சரிவை தான் சந்தித்து வருகிறது. சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்நிய மண்ணில் நடைபெற்ற அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக காயம் காரணமாக விலகி வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக விளையாடவில்லை.

IPL 2024 - Big trouble For CSK as Deepak chahar injured again

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஸ்டார் வீரரான பதிரானாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கடுமையாக தடுமாறியது. இந்த சூழலில் சிஎஸ்கே அணியில் இருக்கும் மற்றொரு வேகப்பந்துவீச்சாளருமான தீபக் சாகருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.

தீபக்சாகர் தற்போது பெரிய அளவில் ஃபார்மில் இல்லை என்றாலும் ஓரளவு டீசன்டாக பந்து வீசி வந்தார். மேலும் இந்திய அணிக்காக விளையாடி அனுபவமும் உள்ளதால் தீபச் சாகரின் இருப்பு சிஎஸ்கே அணிக்கு பலமாகவே கருதப்பட்டது. மேலும் தீபச்சாகர் பேட்டிங்களும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இந்த நிலையில் தீபக்சாகருக்கும் தற்போது காயம் ஏற்பட்டு இருப்பதாக கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

இதனால், அவர் கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே பதிரானாவும் இல்லாத நிலையில் தற்போது ருதுராஜ் வெளியேறி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. தீபக் சாகர் கடந்த மூன்று மாதமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார்.

தற்போது ஐபிஎல் தொடரில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டதால் அந்த வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக தீபக்சாகருக்கு பதில் சர்துல் தாக்கூர் ஏற்கனவே அணியில் இருக்கிறார். நடப்பு சீசனில் தன்னுடைய முதல் போட்டியில் சர்துல் தாக்கூர் களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 8, 2024, 20:15 [IST]
Other articles published on Apr 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+