For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கிரிக்கெட் வாழ்க்கைக்கு 2024 மிக முக்கியமான ஆண்டு.. ஏன் தெரியுமா?

மும்பை : 2024 ஆம் ஆண்டு தோனி கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டில் அவர் மிகப்பெரிய சவால் ஒன்றை எதிர்கொண்டு காத்திருக்கிறார். 42 வயதான தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் தோனி கிரிக்கெட்டுக்கு முழுமையாக முழுக்கு போடும் ஆண்டாக 2024 இருக்கும் என கருதப்படுகிறது.

IPL 2024 - Biggest challenges is ahead for MS Dhoni - Full details

தோனி கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் தம் மீது வைத்திருக்கும் அன்புக்காக மேலும் ஒரு சீசன் விளையாட ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இதற்காக தோனி காயத்திலிருந்து குணமடைய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தோனி இத்துடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதனால் அவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியால் மட்டுமே முடியும்.

சிஎஸ்கே அணியில் தற்போது பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பொறுப்பை வழங்கி அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணி எப்படி இருக்க போகிறது என்பதற்கான விதையை தோனி 2024 ஆம் ஆண்டு விதைக்க வேண்டும். இதற்கு அவர் பல தியாகங்களை செய்தாக வேண்டும்.

குறிப்பாக தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டனாக கூட விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எதிர்காலத்துக்கு தேவையான சிஎஸ்கே அணியை கட்டமைப்பது, சிஎஸ்கே அணி அடுத்த கேப்டனை தேர்வு செய்வது, கடந்த சீசனில் பேட்டிங்கில் விளையாடாமல் இருந்த தோனி புதிய சீசனில் எப்படி விளையாடப் போகிறார் என்பதற்கான திட்டத்தை தீட்டுவது என்று பல சவால்கள் அவருக்கு காத்திருக்கிறது.இதில் முக்கிய சவாலே தமக்கு பிடித்த ரசிகர்களை விட்டு எப்படி குட் பாய் சொல்வது என்பதே தோனிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

Story first published: Monday, January 1, 2024, 11:06 [IST]
Other articles published on Jan 1, 2024
English summary
IPL 2024 - Biggest challenges is ahead for MS Dhoni - Full detailsதோனி கிரிக்கெட் வாழ்க்கைக்கு 2024 மிக முக்கியமான ஆண்டு.. ஏன் தெரியுமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+