Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகுவாரா விராட் கோலி? காரணத்தை பட்டியலிட்டு சொல்லும் வல்லுனர்கள்

Virat Kohli : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விராட் கோலி பாதியிலிருந்து விலகியது தற்போது விவாதத்தை கிளப்பியிருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத விராட் கோலி மூன்றாவது டெஸ்டில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் பிசிசிஐயும் இது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கிரிக்கெட் வல்லுனர்கள் சிலர் விராட் கோலியிடம் அடுக்கடுக்கான கேள்விகள் சிலவற்றைக் கேட்டு இருக்கிறார்கள். அதில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் வீரர் என்று ரசிகர்களால் அறியப்படுபவர்.

IPL 2024 -Cricket Experts angry on virat kohli commitment to test cricket

ஆனால் அவரே டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணத்தைக் காட்டி விலகி இருக்கிறார். இதே விராட் கோலி ஐபிஎல் போட்டியில் ஏதேனும் காரணத்தை சொல்லி இதுவரை விலகி இருக்காரா என்று கேள்வி கேட்டுள்ளனர். இதே போன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் போது தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதனை காட்டி ஆர் சி பி அணிக்காக விளையாடும்போது விராட் கோலி இவ்வாறு பாதியில் செல்வாரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் பணம் கிடைக்கிறது ? டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது அவ்வாறு ஏதும் கிடைக்கவில்லை என்று தான் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விராட் கோலி போன்ற வீரர்களே இவ்வாறு தவறான முன்னுதாரணத்தை இளம் வீரர்களுக்கு காட்டினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கேள்வி எழுப்பு உள்ளனர்.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உள்ள நிலையில் விராட் கோலி இதிலிருந்து விலகி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடும் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு இனி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அதிக சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Story first published: Wednesday, February 7, 2024, 23:12 [IST]
Other articles published on Feb 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+