சிஎஸ்கேவின் ரூ.14 கோடி வீரரின் பரிதாபம்.. 5 பந்தில் 1 ரன்.. Ban எதிராக 3வது டி20யிலும் சொதப்பல்
மும்பை : சிஎஸ்கே அணி ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்சமாக 14 கோடி ரூபாய் கொடுத்து நியூசிலாந்து வீரர் டேரல் மிட்செலை வாங்கியது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணி நம்பி இருந்த பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என அறிவித்தார்.
இதனால் அவரை சிஎஸ்கே அணி விடுவித்தது. இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஒரு வெளிநாட்டு ஆல் ரவுண்டரை சேர்க்க வேண்டும் என்ற முடிவில் டாரல் மிட்செலை சிஎஸ்கே அணி வாங்கியது. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் டாரல் மிட்செல் உலகக்கோப்பை தொடரில் இரண்டு சதம் அடித்து அசத்தினார்.

மேலும் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினார். இதனால் சிஎஸ்கே அணிக்கு அவர் நல்ல வீரராக திகழ்வார் என்பதால் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அவரை குறி வைத்து வாங்கியது. இந்த நிலையில் மினி ஏலம் முடிந்த பிறகு முதல்முறையாக அவர் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடி 14 கோடி ரூபாய் கிடைத்திருப்பதால் வங்கதேச தொடரில் அவர் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் டி20 ஆட்டத்தில் 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 14 ரன்களை மட்டுமே டேரல் மிட்செல் சேர்த்தார். இதேபோன்று வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 24 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடந்த இரண்டு டி20 போட்டியிலும் சரியாக விளையாடாததால் இறுதி டி20 போட்டியில் அவர் ரன் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஐந்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து திரும்பினார். இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் உலகக்கோப்பை தொடரில் சூப்பராக விளையாடிய வீரராக இப்படி வங்கதேசத்துக்கு எதிராக தடுமாறுவது என்று சோகத்தில் உள்ளனர்.
சிஎஸ்கே இவருக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதால் அவர் நன்றாக விளையாடி மானத்தை காப்பாற்றுவாரா இல்லை இப்படித்தான் முக்கியமான போட்டிகளில் சொதப்புவாரா என்று சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர். எனினும் சிஎஸ்கே அணி வாங்கிய வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இன்றைய ஆட்டத்தில் மூன்று ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications