Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கமான வாய்ப்பை வீணடித்த ரூ.8 கோடி வீரர்! அடுத்த கில்லி ஆகியிருக்கலாம்.. ஏமாற்றத்தில் CSK ரசிகர்கள்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல வீரர்கள் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள். அப்படி சிஎஸ்கே அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து, வாங்கிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த 21 வயது வீரரான சமீர் ரிஸ்வி, நடப்பு சீசனில் ஒரு போட்டியில் மட்டும்தான் அதிரடியை காட்டினார்.

அதன் பிறகு அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் சில சமயத்தில் ஒரு நல்ல வாய்ப்பு அமையும்.

IPL 2024- CSK 8 crore Player Sameer rizvi wasted golden oppourtunity today vs pbks

அப்போது நமக்கு எதிராக கள சூழல் இருந்தாலும், அதனை அவர் எவ்வாறு எதிர்கொண்டு சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்து அந்த வீரரின் திறமை கணக்கில் கொள்ளப்படும். அப்படி பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

பவர் பிளேவில் சிஎஸ்கே அணி நல்ல ஸ்கோரை எடுத்தாலும் அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ரஹானே 29 ரன்களிலும் சிவம் துபே டக் அவுட் ஆகியும் ஜடேஜா இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த சூழலில் சிஎஸ்கே அணி இம்பாக்ட் வீரராக சமீது ரிஸ்வியை களமிறங்கியது. ஆனால் சமீர் ரிஸ்வி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் மிகவும் தோய்வாக மாறியது.

பந்தை எவ்வளவு அடித்தாலும் பவுண்டரிக்கு செல்லவில்லை. எனினும் இந்த சூழலில் சமீர் ரிஸ்வி எவ்வாறு ரன்கள் சேர்த்து தன்னுடைய முதிர்ச்சியை காட்டப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த வாய்ப்பை மட்டும் சமீர் ரிஸ்வி, சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் அடுத்த ஸ்டார் வீரராக விளங்கி இருப்பார்.

எனினும் களச் சூழல் அவருக்கு எதிராக மாறியதால், சமீர் ரிஸ்வி ரன் சேர்க்க தடுமாறினார். அவர் அடித்த ஷாட்டுகள் ஒன்று கூட பவுண்டரி லைனுக்கு செல்லவில்லை. காரணம் ஆடுகளம் தோய்வாக இருந்ததுதான். எனினும் சமீர் ரிஸ்வியும், ருதுராஜூம் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர்.ஒரு கட்டத்தில் சமீர் ரிஸ்வி அதிரடியாக ஆட முயற்சித்த நிலையில் தெர்ட்மேன் திசையில் நேராக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்த இன்னிங்சில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். இதனால் சமீர் ரிஸ்வி தன்னுடைய வாய்ப்பை மீட்டு எடுத்து விட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Wednesday, May 1, 2024, 21:21 [IST]
Other articles published on May 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+