Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏலே! ஹர்திக் உமக்கு ஆப்பு உறுதி.. சிவம் துபேவை வைத்து காய் நகர்த்திய சிஎஸ்கே.. முதல் ஒவரிலே விக்கெட்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வின் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே, முதல் முறையாக பந்து வீசி விக்கெட்டை எடுத்திருக்கிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டராக சிவம் துபே, துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடப்பு சீசனில் சிவம் துபே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்.

IPL 2024- CSK All rounder shivam dube picks Baristow wicket in his first over

குறிப்பாக ரசிகர்களால் சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படும் அளவுக்கு சிவம் துபே பேட்டிங் அபாரமாக இருக்கிறது. இந்த நிலையில் சிவம் துபே பேட்டிங் மட்டும் செய்து வந்தாலும், இந்த சீசனில் அவர் ஒரு முறை கூட பந்து வீசவில்லை. இதனால் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சிஎஸ்கே விடம் கோரிக்கை விடுத்தார்கள்.

சிவம் துபேவின் பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்கு வேண்டுமானாலும் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்திய அணிக்கு சிவம் துதே குறைந்தபட்சம் இரண்டு ஓவர்களாவது வீச வேண்டும். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலே அவருக்கு அதிகமாக பந்து வீசு வாய்ப்பு தாருங்கள் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.

ஆனால் அதனை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்க வில்லை. சிவம் துபே தொடர்ந்து பேட்ஸ்மேனாக மட்டும்தான் விளங்கி வந்தார். இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தீபக் சாகர் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் சிவம் துபே ஒரு ஓவர் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. சிவம் துபே கையில் பந்து வந்தவுடன் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் சிவம் துபே தன்னுடைய ஸ்லோ பந்துகளால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அதிரடி வீரர் ஜானி பாரிஸ்டோ விக்கெட்டை சிவம் துபே வீழ்த்தினார். இதனை ரசிகர்கள் கொண்டாடினர். எனினும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் சென்றாலும் விக்கெட்டை முதல் ஓவரிலே சிவம் துபே எடுத்து இருப்பது அவருடைய பந்து வீச்சு திறமையை காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சிவம் துபே பந்து வீசினால், நிச்சயம் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் உறுதி ஆகிவிடும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். இதனால் ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Story first published: Wednesday, May 1, 2024, 23:12 [IST]
Other articles published on May 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+