For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் ஆண்ட பரம்பரைகள்.. இனி சிஎஸ்கே, மும்பை காலம் மலையேறி போச்சு.. தோனியின் மெகா தவறு!

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் பலமான அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இரு அணிகளும் தலா ஐந்து முறை கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறார்கள். அபார பேட்டிங் மட்டுமல்லாமல் புத்திசாலித்தனமான பவுலர்கள், மாஸ்டர் கேப்டன்கள் என இரு அணிகளின் பலமாக இருந்தது.

இந்த நிலையில் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று என்ற வரிக்கு ஏற்ப போல் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் மாறி வருகிறது. இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு காலத்தில் 170 ரன்களை நிர்ணயத்தால் அதை சேஸ் செய்ய தடுமாறுவார்கள்.

IPL 2024 - CSK and MI fails to adapt new batting era may end their dominance

ஆனால் இப்பொழுது எல்லாம் 120 ரன்கள் 15 வது ஓவரில் எட்டப்பட்டு விடுகிறது என்று கூறினார். இந்த மாற்றத்தை கணித்து சன்ரைசர்ஸ் அணி, டெல்லி அணி, பஞ்சாப் அணி அதற்கு ஏற்றார் போல் வீரர்களையும் யுக்திகளையும் மாற்றி வருகிறார்கள். தற்போது பேட்டிங்கிற்கும், பந்து வீச்சுக்கும் இடையில் ஒரு பேலன்ஸ் இல்லாமல் இருக்கிறது. டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் சொர்க்கமாக மாறிவிட்டது.

உதாரணத்திற்கு 11-வது 15வது ஒவ்வொரு வரை t20 கிரிக்கெட்டில் ரன் குவிப்பு வேகம் குறையும். ஆனால் தற்போது இம்பேக்ட் வீரர் போன்ற விதி காரணமாக பல அணிகள் ரன் குவிக்கும் வேகத்தை தொடர்ந்து ஒரே மாதிரி வைத்திருக்கிறது. இதனால் 180- 190 ரன்கள் எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நிலை மாறி 260 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி கிடைக்காது என்ற நிலை வந்து விட்டது.

t20 கிரிக்கெட் தற்போது இந்த நிலையை நோக்கி தான் நகர்ந்துவிட்டது. ஆனால் இதனை மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கணிக்க தவறிவிட்டது. இரு அணிகளும் இன்னும் பழைய ஸ்டைலையே பின்பற்றி வருகிறார்கள். ஆனால் மற்ற அணிகள் எல்லாம் அபாரமாக விளையாடி கொடி கட்டி பறக்கின்றனர்.

ஆனால் சிஎஸ்கேவும் மும்பை அணியும் புதிய ஸ்டைலுக்கு மாறவில்லை. இதனால் இனி சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் குறைந்துவிடும் என்றும் சன்ரைசர்ஸ், டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் இனி கொடிக்கட்டி பறக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை அணி கூட ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய இலக்கை குவித்தது ஆனால் சிஎஸ்கே அணி 210 -220 ரன்களை இம்முறை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 27, 2024, 17:51 [IST]
Other articles published on Apr 27, 2024
English summary
IPL 2024 - CSK and MI fails to adapt new batting era may end their dominance ஐபிஎல் தொடரில் ஆண்ட பரம்பரைகள்.. இனி சிஎஸ்கே, மும்பை காலம் மலையேறி போச்சு.. தோனியின் மெகா தவறு!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+