For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - சிஎஸ்கே அபார வெற்றி.. சேப்பாக்கத்தில் 16 வருடமாக தோற்கும் ஆர்சிபி.. ருதுராஜ்க்கு முதல் வெற்றி

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கேவை வழி நடத்தினார்.

பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை முதல் போட்டியில் சிஎஸ்கே வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டுதான் வெற்றி பெற்றது. இதனால் 16 ஆண்டுகளாக தொடரும் இந்த சோகத்தை ஆர்சிபி நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

IPL 2024 - CSK Beat RCB by 6 wickets with brilliant batting performance


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராக களமிறங்கிய கேப்டன் டுபிளசிஸ் 35 ரன்கள், விராட் கோலி 21 ரன்களும் எடுக்க,பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், ரஜ்ம்த் பட்டிதார் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஆர் சி பி அணிக்கு முதல் போட்டியில் களமிறங்கிய கேமிரான் கிரீன் 18 ரன்கள் சேர்த்தார்.


ஆர் சி பி அணி தடுமாறிய நிலையில் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அனுஜ் ராவ்த் 25 பந்துகளில் 48 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணிக்காக தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய வங்கதேச வீரர் முஸ்தஃபூர் ரஹ்மான் 29 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதை அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் 15 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவிந்திரா, ரஹானே ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ரகானே 27 ரன்களில் வெளியேற, ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் சேர்த்தார்.


மற்றொரு நியூசிலாந்து வீரரான டாரல் மிட்செல் 22 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து இம்பேக்ட் வீரராக களம் இறங்க சிவம் துபே, ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆர் சி பி வீரர்கள் தடுமாற சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் முதல் போட்டியிலே சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கிறது.

Story first published: Saturday, March 23, 2024, 0:04 [IST]
Other articles published on Mar 23, 2024
English summary
IPL 2024 - CSK Beat RCB by 6 wickets with brilliant batting performance IPL - சிஎஸ்கே அபார வெற்றி.. சேப்பாக்கத்தில் 16 வருடமாக தோற்கும் ஆர்சிபி.. ருதுராஜ்க்கு முதல் வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+