சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி ஆறாவது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை சிஎஸ்கேவிடம் வெற்றி பெற்றது இல்லை. சன்ரைசர்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக விளங்குவதால் இந்த தோல்வி பயணம் முடிவுக்கு வரும் என்று அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்.

ஆனால் இன்றும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ரஹானே 9 ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது வீக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருதுராஜ், டேரல் மிட்செல் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இதில் டேரல் மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் சேர்க்க சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்து இரண்டு ரன்களில் சதத்தை தவறவிட்டார். ருதுராஜ் 10 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடித்திருந்தார். இறுதியில் சிவம் துபே வழக்கம் போல் அதிரடியாக ஆடி நான்கு சிக்சருடன் 20 பந்துகளின் 39 ரன்கள் சேர்க்க தோனி ஒரு பவுண்டரியுடன் இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் சேர்த்தார்.
இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் களமிறங்கினர். டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அதிரடியாக விளையாட முயற்சித்தனர். எனினும் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் யாருமே எதிர்பாராத வகையில் சிஎஸ்கே வீரர் தேஷ் பாண்டேவின் அபார பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
டிராவிஸ் ஹெட் 13 ரன்களிலும் அன்மோல் ப்ரீத் சிங் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனை எடுத்து அபிஷேக் ஷர்மா மற்றும் ஏய்டன் மார்க்கரம் ஜோடி சேர்ந்து அணியை சரி விலிருந்து மீட்க போராடினர். எனினும் டேஷ்பாண்டே ,அபிஷேக் ஷர்மாவை 15 ரன்களில் வீழ்த்தினார். அபாரமாக பந்து வீசிய பதிரானா மார்க்கரம் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணி தோல்வியை நோக்கி சென்றது. நித்திஷ் குமார் ரெட்டி 15 ரன்களிலும் ஹென்ரிச் கிளாசன் 20 ரன்களிலும் அப்துல் சமத் 19 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 18 புள்ளி ஐந்து ஓவர்கள் எல்லாம் 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அயனியை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சி எஸ் கே வீழ்த்தி இருக்கிறது. சென்னை மைதானத்தில் சிஎஸ்கே அணி பெரும் ஐம்பதாவது வெற்றி இதுவாகும். ஐபிஎல் வரலாற்றில் தோனிக்கு இது 150ஆவது வெற்றியாகும்.