Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Daddy ஆர்மியிலிருந்து பேபி ஆர்மியாக மாறிய சிஎஸ்கே.. மாறிய திட்டம்.. 35 வயது மேல் 4 வீரர்கள் தான்

துபாய் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டாடி ஆர்மி என்று ரசிகர்களால் போற்றப்படும் சிஎஸ்கே அணி தற்போது தங்களுடைய யுத்தியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஒரு காலத்தில் சிஎஸ்கே அணி வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என்றால் வயதானவர்கள் ஓய்வு பெற்றவர்கள் ஆகியவர்களை குறி வைத்து எடுப்பார்கள்.

அதில் ராயுடு, வாட்சன்,டுபிளசிஸ் போன்ற வீரர்கள் எல்லாம் சிஎஸ்கே அணிக்காக ரத்தம் சிந்தி விளையாடி சாம்பியன் பட்டத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மற்ற அணி எல்லாம் டி20 என்பது இளம் வீரர்கள் விளையாடக்கூடிய விளையாட்டு என்று நம்பிய நிலையில் அதனை சுக்கு நூறாக சிஎஸ்கே உடைத்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

IPL 2024 - CSK Becaming young age players team by removing daddy army tag

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் 16 வருடங்கள் கடந்த நிலையில் சிஎஸ்கே அடுத்த 10 ஆண்டுகளில் அணி எப்படி இருக்க வேண்டும் என்பதை கணக்கில் கொண்டு தங்களுடைய யுத்தி பெருசாக மாற்றி இருக்கிறது. அதன் அடிப்படையில் இனி சிஎஸ்கே அணி இளம் வீரர்களை வைத்து அணியை உருவாக்கலாம் என்ற கணக்கை போட்டு வருகிறது.

இன்றைய ஏலத்தில் கூட 22 வயதான ரச்சின் ரவீந்திரா, 20 வயதான சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை தான் சிஎஸ்கே வாங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்த வீரர்கள் எல்லாம் இன்னும் பத்து ஆண்டுகள் சிறப்பாக விளையாடக் கூடியவர்களாக திகழ்கிறார்கள். இதன் காரணமாக சிஎஸ்கே அணி அடுத்த 10 ஆண்டுகளில் பலம் வாய்ந்த அணியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா, மோயின் அலி, ரகானே ஆகிய வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான். இதனால் டாடி ஆர்மி என்று ரசிகர்களால் போற்றப்பட்டு வந்த சிஎஸ்கே தற்போது பேபி ஆர்மியாக மாறிவிட்டது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

சீனியர்களால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தான் சிறப்பாக விளையாட முடியும். அந்த வகையில் ஐபிஎல் தொடரை 2021 மற்றும் 23 ஆம் ஆண்டு சிஎஸ்கே வென்று அசத்து விட்டது. இதனால் தற்போது இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்களையும் சாம்பியன் ஆகும் முயற்சியில் தோனி எடுத்து இருக்கிறார்.

Story first published: Tuesday, December 19, 2023, 19:30 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+