Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்ட்லே இல்லையே.. யாருமே எதிர்பார்க்காத வெளிநாட்டு வீரரை வாங்கிய சிஎஸ்கே.. இது தோனி ஸ்டைல்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் தற்போது துபாயில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி யாருமே கனவில் நினைக்காத ஒரு வீரரை வாங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. சிஎஸ்கே அணியில் ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது.

அதாவது அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் அணியில் இல்லை என்ற குறை இருந்தது. இலங்கை வீரர் பதிராணா மட்டும் தான் அணியில் இருந்தார். அவரை மட்டுமே நம்பி ஐபிஎல் போன்ற தொடரில் களமிறங்குவது கடினமாகும்.

IPL 2024 - CSK Bought Mustafizur Rahman as overseas fast bowler

இந்த நிலையில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்சை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால் அவருடைய விலை அதிகமாக சென்றதால், சென்னை அணி பின்வாங்கியது. இதேபோன்று தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோயிட்சேவைக்கும் சிஎஸ்கே வலை விரித்தது.

ஆனால் அதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை எடுத்து சிஎஸ்கே அணி அல்சாரி ஜோசப் வாங்க ஆர்வம் காட்டியது. ஆனால் அவருடைய விலையும் அதிகமாக போனதால் சிஎஸ்கே அணி பின்வாங்கியது. இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் சிஎஸ்கே அணி அதனை பவுலராகத் தான் வாங்கப் போகிறது என்பதை ரசிகர்களும் முடிவு எடுத்தனர்.

ஆனால் யாரை தான் வாங்க போகிறது என்று காத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் பெயர் ஏலத்தில் வந்தது. அப்போது முதல் ஆளாக சிஎஸ்கே துண்டை போட்டு அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது.28 வயதான முஸ்தஃபீஷர் ரஹ்மான் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனுபவத்துடன் இருக்கிறார்.

இதுவரை முஸ்தஃபீசுர் ரஹ்மான் 48 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் கைப்பற்றி இருக்கிறார். ஒரு ஓவருக்கு 7.93 என்ற எக்னாமியை அவர் வைத்திருக்கிறார். முஸ்தஃபீசுர் ரஹ்மான் புயல் போல் சர்வதேச கிரிக்கெட்டில் வந்தாலும் பிற்காலத்தில் தடுமாறினார். எனினும் தற்போது ஒரு அளவுக்கு டீசன்டாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி வருகிறார்.மேலும் முஸ்தஃபீஸ்ர் ரஹ்மான் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அது சிஎஸ்கேவுக்கு நிச்சயம் கூடுதல் சாதகமாக கருதப்படுகிறது. சி எஸ் கே , ஐ பி எல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வங்கதேச அணி வீரரை தேர்வு செய்திருக்கிறது. இது தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 19, 2023, 20:40 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+